தங்ககவச அலங்காரத்தில் யமுனாம்பாள். 
தற்போதைய செய்திகள்

நீடாமங்கலம் யமுனாம்பாள் கோயிலில் தை கடைசி வெள்ளித் திருவிழா!

நீடாமங்கலம் யமுனாம்பாள் கோயிலில் தை கடைசி வெள்ளி திருவிழா அதிவிமரிசையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

DIN

நீடாமங்கலம்: நீடாமங்கலம் யமுனாம்பாள் கோயிலில் தை கடைசி வெள்ளி திருவிழா அதிவிமரிசையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தஞ்சையை ஆட்சிபுரிந்த மராட்டிய மன்னர் பிரதாப சிம்மரின் மனைவி யமுனாம்பாள். இவர் நீடாமங்கலம் அரண்மனையில் தங்கி வசித்து வந்தார். அப்போது இந்த பகுதி மக்களை தெய்வம் போல் காத்துவந்தார். இதனாலேயே அவர் நிறைமாத கர்ப்பிணியாக ஐக்கியமான யமுனாம்பாள் தோட்டத்தில் அவருக்கு கோயில் எழுப்பி நீடாமங்கலம் பகுதியைச் சேர்ந்த மக்கள் வழிபாடு நடத்தி வருகின்றனர்.

கர்ப்பிணிகள் சுகப்பிரசவம் ஆகவும், திருமணமாகாத பெண்கள் திருமணம் நடைபெறவும் இக்கோயிலில் வழிபட்டு வருகின்றனர்.

ஒவ்வொரு வெள்ளிக்கிழமை, பௌர்ணமி நாள்களிலும் சிறப்பு பூஜைகள் அன்னதானம் வழங்கப்படுகிறது.

ஆண்டுதோறும் தை கடைசி வெள்ளிக்கிழமையன்று யமுனாம்பாள் கோயில் திருவிழா அதிவிமரிசையாக நடத்தப்படுகிறது. இந்த திருநாளில் சாதி, மதங்களைக் கடந்து வேறுபாடின்றி அனைவரும் யமுனாம்பாளை தரிசிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

பால்குடம் எடுத்து வரும் பக்தர்கள்.

சிறப்பு வாய்ந்த இந்த கோயிலில் தை கடைசி வெள்ளி திருவிழா நடைபெற்றது. இதனை முன்னிட்டு பக்தர்கள் ராஜகணபதி சன்னதியிலிருந்து பால்குடம் எடுத்து நகர முக்கிய வீதிகளின் வழியாக வலம் வந்தனர். தொடர்ந்து தொடர்ந்து கோயிலில் அம்மனுக்கும் பரிவார தெய்வங்களுக்கும் அபிஷேக, ஆராதனைகளும், கஞ்சிவார்த்தலும் அதனைத்தொடர்ந்து விசேஷசந்தனகாப்பு அலங்காரமும், சிறப்பு பூஜையும் நடைபெற்றது.

காலை தொடங்கி இரவு வரை 10 ஆயிரம் பேர்களுக்கு சிறப்பு அன்னதானமும் நடைபெறுகிறது.

கும்பகோணம் வர்த்தகர் சங்கத்தலைவர் கணேசன் 516 பெண்களுக்கு வளையல், ஜாக்கெட்பிட் அடங்கிய பிரசாத பைகளை வழங்கினார்.

முன்னாள் வர்த்தகர் சங்கத்தலைவர் இளங்கோவன் மற்றும் சந்தானராமசுவாமி கைங்கர்ய சபாவினர் சேவைப்பணியாற்றினர். விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.

விழா ஏற்பாடுகளை தஞ்சாவூர் சத்திரம் மேலாளர் மற்றும் நகரவாசிகள், கிராமவாசிகள் விழா கமிட்டியினர் செய்திருந்தனர். நீடாமங்கலம் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆஸி. டெஸ்ட் தொடருக்கான இந்தியா ஏ அணியின் கேப்டனாக ஷ்ரேயாஸ் ஐயர் நியமனம்!

ஆசிய கோப்பைக்கான புதிய சிகையலங்காரம்..! வைரலாகும் ஹார்திக் புகைப்படங்கள்!

தொடர் மழை, நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட ஹிமாசல்: 360 பேர் பலி, 1001 சாலைகள் மூடல்!

ஞாயிறு இரவு நிகழும் சந்திரகிரகணம்: சிவப்பு நிலா பற்றிய முழு விவரம்

2026 உலகக் கோப்பை: முதல் ஆப்பிரிக்க நாடாக மொராக்கோ தேர்வு!

SCROLL FOR NEXT