எடப்பாடி பழனிசாமி 
தற்போதைய செய்திகள்

ரயிலில் கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை அதிர்ச்சி அளிக்கிறது: இபிஎஸ்

ரயிலில் கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை அளித்து கீழே தள்ளிய சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது. ரயில்கூட பெண்கள் பயணிக்க முடியவில்லை என்ற நிலை வந்திருப்பது வெட்கக்கேட்டின் உச்சம்

DIN

ரயிலில் கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை அளித்து கீழே தள்ளிய சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது. ரயில்கூட பெண்கள் பயணிக்க முடியவில்லை என்ற நிலை வந்திருப்பது வெட்கக்கேட்டின் உச்சம் என அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.

இது குறித்து அவர் சமூக வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது:

கோவை-திருப்பதி இடையே சென்றுக்கொண்டிருந்த ரயிலில், கர்ப்பிணி பெண்ணுக்கு இருவர் பாலியல் தொல்லை அளித்ததோடு, அந்த பெண் கூச்சலிட முயற்சி செய்ததால் ரயிலில் இருந்து கீழே தள்ளிவிட்டதாக வரும் செய்தி பெரும் அதிர்ச்சியளிக்கிறது.

தமிழ்நாட்டில் பெண்கள் பாதுகாப்பாக சாலையில் நடந்து செல்ல முடியவில்லை; பள்ளி, கல்லூரிகளுக்கு, பணியிடங்களுக்கு செல்ல முடியவில்லை; தற்போது ரயிலில் கூட பயணிக்க முடியவில்லை என்ற நிலை வந்திருப்பது வெட்கக்கேட்டின் உச்சம்.

மு.க.ஸ்டாலின் மாடல் திமுக அரசு பெண்களின் பாதுகாப்பில் கடுகளவு கூட கவனம் செலுத்தாததன் நீட்சியே இத்தகைய கொடுமைகள் தொடர்கின்றன.

கர்ப்பிணி பெண் என்று கூட பாராமல் பாலியல் தொல்லை அளித்துள்ள, வக்கிர புத்தியுடைய கயவர்கள் மீது மிகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்...!

நைஜீரியாவில் படகு கவிழ்ந்து விபத்து! 26 பேர் பலி

சுதந்திரப் போராட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர்கள் சிறை சென்றார்களா? மோடி விளக்கம்

இந்த வார ஓடிடி படங்கள்!

சூரியவன்ஷி அதிவேக டெஸ்ட் சதம்! 78 பந்துகளில் சதமடித்து ஆஸி.யை அலறவிட்ட சிறுவன்!

SCROLL FOR NEXT