நக்சல்கள் சுட்டுக் கொலை (கோப்புப் படம்) 
தற்போதைய செய்திகள்

பாதுகாப்புப் படையினரால் 12 நக்சல்கள் சுட்டுக்கொலை!

சத்தீஸ்கரில் 12 நக்சல்கள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டதைப் பற்றி...

DIN

சத்தீஸ்கர் மாநிலத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 12 நக்சல்கள் சுட்டுக்கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிஜப்பூர் மாநிலத்தின் இந்திரவதி தேசியப் பூங்காவில் இன்று (பிப்.9) காலை பாதுகாப்புப் படையினர் நக்சல்களுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது, இருதரப்புக்கும் இடையில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 12 நக்சல்கள் சுட்டுக்கொல்லப்பட்டதாக அம்மாநில காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக, கடந்த ஜன.31 அன்று பிஜப்பூர் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடனான துப்பாக்கிச் சூட்டில் 8 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

இதையும் படிக்க: மணிப்பூர்: 5 ஏக்கர் போதைச் செடிகள் அழிப்பு!

கடந்த ஜன.6 அன்று நக்சல்கள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் பாதுகாப்புப் படையினரின் வாகனம் ஒன்று வெடித்து சிதறியது. அதில், ஓட்டுநர் ஒருவர் உள்பட 8 மாவட்ட ரிசர்வ் பாதுகாப்புப் படையினர் பலியாகினர்.

இதனைத் தொடர்ந்து, வருகின்ற 2026 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவிலுள்ள நக்சல்கள் அழிக்கப்படுவார்கள் என்று இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதியளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேற்கு வங்கத்தில் எம்.பி. மீது தாக்குதல்: என்.ஐ.ஏ. விசாரணை கோரும் பாஜக!

ஹிமாசல பிரதேசத்தில் நிலச்சரிவு: பலி 18-ஆக உயர்வு!

மகளிர் உலகக்கோப்பை: வங்கதேசம் போராடி தோல்வி!

ஐசிசியின் சிறந்த வீராங்கனை விருதுக்கான போட்டியில் ஸ்மிருதி மந்தனா!

ஃபேப்டெக் டெக்னாலஜி பங்குகள் 4.55% சரிவுடன் நிறைவு!

SCROLL FOR NEXT