கோப்புப் படம் 
தற்போதைய செய்திகள்

பாதுகாப்புப் படையினரின் என்கவுன்ட்டரில் 31 நக்சல்கள், 2 வீரர்கள் பலி!

சத்தீஸ்கரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்ட்டரில் 31 நக்சல்கள் மற்றும் 2 வீரர்கள் பலியானதைப் பற்றி...

DIN

சத்தீஸ்கர் மாநிலத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய நக்சல்களுக்கு எதிரான என்கவுன்ட்டரில் 31 நக்சல்கள் மற்றும் 2 வீரர்கள் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிஜப்பூர் மாநிலத்தின் இந்திரவதி தேசியப் பூங்காவில் இன்று (பிப்.9) காலை முதல் பாதுகாப்புப் படையினர் நக்சல்களுக்கு எதிரான தாக்குதல் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது, இருதரப்புக்கும் இடையில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 31 நக்சல்கள் சுட்டுக்கொல்லப்பட்டதுடன் 2 பாதுகாப்புப் படை வீரர்களும் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, இன்று (பிப்.9) காலை 12 நக்சல்கள் சுட்டுக்கொல்லப்பட்டதாகக் கூறப்பட்டிருந்த நிலையில் தற்போது பலி எண்ணிக்கை 31 ஆக உயர்ந்துள்ளது. எனினும், நக்சல்களுக்கு எதிரான தாக்குதல் நடவடிக்கை தொடர்வதால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிக்க: மகா கும்பமேளாவில் மேலும் ஒரு தீ விபத்து

கடந்த ஜன.6 அன்று நக்சல்கள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் பாதுகாப்புப் படையினரின் வாகனம் ஒன்று வெடித்து சிதறியதில் 8 மாவட்ட ரிசர்வ் பாதுகாப்புப் படையினர் உள்பட 9 பேர் பலியாகினர்.

இந்நிலையில், 2025 ஆம் ஆண்டு துவங்கியதிலிருந்து தற்போது வரை 81 நக்சல்கள் பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மருதம் எல்லையம்மன் கோயில் தோ்த் திருவிழா

முனைவா் வசந்திதேவி மறைவுக்கு அஞ்சலி

தஞ்சையில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டம் தொடக்கம்

வாலாஜாபாத்தில் 195 ஆண்டுகள் பழைமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு

ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சுற்றுலா பேருந்து விபத்து: 6 போ் காயம்

SCROLL FOR NEXT