கோப்புப் படம் 
தற்போதைய செய்திகள்

குடியிருப்பு கட்டடத்தில் தீ! பெண் பலி..ஒருவர் படுகாயம்!

மகாராஷ்டிரத்தில் குடியிருப்பு கட்டடத்தில் ஏற்பட்ட தீயினால் பெண் ஒருவர் பலியானதைப் பற்றி...

DIN

மகாராஷ்டிர மாநிலம் தாணேவிலுள்ள குடியிருப்பு கட்டடத்தில் ஏற்பட்ட தீயினால் பெண் ஒருவர் பலியானார். மேலும், ஒருவர் படுகாயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாணேவின் எனஐபிஎம் சாலையிலுள்ள சன்ஸ்ரீ குடியிருப்பு கட்டடத்திலுள்ள ஓர் வீட்டில் இன்று (பிப்.9) மாலை 3.30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து, தகவலறிந்து அங்கு விரைந்த தீயணைப்புப் படையினர் 4 தீயணைப்பு வாகனங்களின் மூலம் அந்த தீயை அணைத்தனர்.

இதையும் படிக்க: கொல்கத்தா பெண் மருத்துவர் பிறந்த நாளில் அமைதிப் பேரணி!

இதனைத் தொடர்ந்து, இந்த தீ விபத்தில் ஒரு பெண் உள்பட 2 பேர் படுகாயமடைந்திருந்த நிலையில் அவர்கள் இருவரும் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி அந்த பெண் பரிதாபமாக பலியானார்.

இந்த விபத்திற்கான காரணம் என்னவென்று தெரியாத நிலையில் அதை கண்டறிய அம்மாநில அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாகக் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நிழலிலும் ஜொலிக்கற நிரந்தர ஒளி அவ... சான்யா மல்ஹோத்ரா!

53 கிலோ கோயில் நகைகள் ஸ்டேட் வங்கியில் முதலீடு!

டி20: தெ.ஆ. அணியை வீழ்த்தி வரலாறு படைத்தது நமீபியா..!

தீபாவளி வருகிறது! 70% சலுகையில் பட்டாசு என்ற விளம்பர மோசடி!

தீர்ப்பு எதிரொலி: முதுநிலை ஆசிரியர் தேர்வு தொடங்கியது!

SCROLL FOR NEXT