தற்போதைய செய்திகள்

சுழல் - 2 வெப் தொடரின் வெளியீட்டுத் தேதி!

சுழல் - 2 வெப் தொடரின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு.

DIN

சுழல் - 2 வெப் தொடரின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

கதிர், ஐஸ்வர்யா ராஜேஷ், பார்த்திபன், ஷ்ரேயா ரெட்டி நடிப்பில் பிரம்மா, அனுசரண் இயக்கத்தில் உருவான வெப் தொடர் சுழல். இத்தொடரை புஷ்கர் - காயத்ரி தயாரித்தனர்.

இந்த வெப் தொடர் கடந்த 2022 ஜூன் 17-ஆம் தேதி வெளியாகி ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இதனிடையே, இத்தொடரின் இரண்டாம் பாகத்திற்கான திரைக்கதையை எழுதி வருவதாக இயக்குநர்கள் புஷ்கர் - காயத்ரி தெரிவித்திருந்தனர்.

தற்போது இத்தொடரின் படப்பிடிப்பு நிறைவடைந்து வெளியீட்டிற்கு தயாராகவுள்ளது.

இந்த நிலையில், சுழல் - 2 வெப் தொடர் வரும் பிப். 28 ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்தொடரின் பிரதான கதாபாத்திரத்தில் கதிர், ஐஸ்வர்யா ராஜேஷ், நடிகை கெளரி கிஷன், மஞ்சிமா மோகன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

சாம்பலூர் என்ற மலைக் கிராமத்தில் வசிக்கும் சிறுமி மாயமாகிறார். அவரை கண்டுபிடிக்க காவல் துறை ஆய்வாளராக வரும் கதிர் பல்வேறு முயற்சிகளை மேற்கொள்கிறார். இதனை மையமாகக் கொண்டு கிரைம் திரில்லராக எடுக்கப்பட்டது சுழல் முதல் பாகம் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

செமெரு எரிமலை வெடிப்பு! வீடுகளை இழந்த மக்கள்! | Indonesia

கர்நாடக முதல்வர் பதவியில் மாற்றம்? டி.கே. சிவக்குமாரின் ஆதரவு எம்எல்ஏக்கள் தில்லி பயணம்!

காட்சிக்குப் பின்னால்... நித்யா மெனன்!

Return-தான்! Reject இல்ல! மெட்ரோ நிராகரிப்பு திட்டமிட்ட சதி! : நயினார் நாகேந்திரன் | BJP | DMK

பஞ்சாப் கிங்ஸ் அணி ஏலத்துக்கு செல்லவே தேவையில்லை: அணி உரிமையாளர்

SCROLL FOR NEXT