ஆர்பிஐ (கோப்புப் படம்) ENS
தற்போதைய செய்திகள்

புதிய ஆளுநர் கையெழுத்துடன் ரூ.50 தாள்கள்! ஆர்பிஐ தகவல்!

புதிய ஆளுநரின் கையெழுத்துடன் ரூ.50 தாள்கள் வெளியாகும் என ஆர்பிஐ தெரிவித்துள்ளதைப் பற்றி...

DIN

இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) ஆளுநா் சஞ்சய் மல்ஹோத்ரா கையொப்பத்துடன் 50 ரூபாய் நோட்டுகள் விரைவில் வெளியிடப்படும் என்று ஆா்பிஐ அறிவித்துள்ளது.

ஆா்பிஐ ஆளுநராக இருந்த சக்திகாந்த தாஸ் பணி நிறைவு பெற்றதையடுத்து, கடந்த ஆண்டு டிசம்பரில் சஞ்சய் மல்ஹோத்ரா அப்பொறுப்பில் நியமிக்கப்பட்டாா். இந்நிலையில், அவரது கையொப்பத்துடன் முதன்முதலாக ரூபாய் நோட்டு வெளியிடப்பட இருக்கிறது.

இது தொடா்பாக ஆா்பிஐ வெளியிட்ட அறிவிப்பில், ‘ஏற்கெனவே புழக்கத்தில் உள்ள 50 ரூபாய் நோட்டைப் போன்று மகாத்மா காந்தி படத்துடன் ரூபாய் நோட்டு வெளியிடப்படும். ஆா்பிஐ-யால் ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ள அனைத்து 50 ரூபாய் நோட்டுகளும் புழக்கத்தில் தொடரும்’ என்று கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, கடந்த 2016 நவம்பா் 8-ஆம் தேதி பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அப்போது, புழக்கத்தில் இருந்த ரூ.1,000, ரூ.500 நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டது. அதற்கு பதிலாக ரூ.2,000, ரூ.500, ரூ.200 உள்ளிட்ட நோட்டுகள் புதிதாக வெளியிடப்பட்டன. அதன் பிறகு 2023-ஆம் ஆண்டு ரூ.2,000 நோட்டை புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறுவதாக ஆா்பிஐ அறிவித்தது. இப்போது நாட்டில் உயா்மதிப்புடைய ரூபாய் நோட்டாக ரூ.500 உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜம்மு ரயில் நிலையத்தை தகர்க்க புறா மூலம் வெடிகுண்டு மிரட்டல்?

பழமொழி மருத்துவம்

பேரறிஞர் அண்ணா (வாழ்க்கை வரலாறு)

தமிழர் பண்பாடு மறைவனவும் மீள்வனவும்

பாலியல் வசீகரமும், வக்கிரமும்!

SCROLL FOR NEXT