கோப்புப் படம் 
தற்போதைய செய்திகள்

ரூ.1.5 கோடி போதைப் பொருள் பறிமுதல்! வெளிநாட்டவர் உள்பட 2 பேர் கைது!

தில்லியில் போதைப் பொருள் கடத்திய இருவர் கைது செய்யப்பட்டதைப் பற்றி...

DIN

புது தில்லியில் ரூ. 1.5 கோடி மதிப்பிலான போதைப் பொருள் கடத்திய ஒரு ஆப்பிரிக்க நாட்டவர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்தாகக் காவல் துறையினர் இன்று (பிப்.14) தெரிவித்துள்ளனர்.

ஆப்பிரிக்க நாட்டைச் சேர்ந்த யாவோ (வயது 40) மற்றும் பிகார் மாநிலத்தைச் சேர்ந்த பிகாஸ் (23) ஆகிய இருவர் தில்லியின் பல்வேறு இடங்களில் கொகைன் எனும் போதைப் பொருளை விற்பனை செய்து வந்த நிலையில் அவர்களை பிடிப்பதற்காக காவல் துறையினர் நடவடிக்கை மேற்கொண்டனர்.

இந்நிலையில், தில்லியின் பிகாஜி காமா பகுதியிலுள்ள பேருந்து நிலையம் அருகில் இருவரும் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனர். பின்னர், அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் அவர்களிடமிருந்து ரூ.1.5 கோடி மதிப்பிலான போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டதுடன் இருவரிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: பெண் மீது ஆசிட் வீச்சு: 15 நிமிடங்களில் கைது செய்யப்பட்ட குற்றவாளி!

கடந்த 2018 ஆம் ஆண்டு சுற்றுலா விசா மூலமாக இந்தியாவிற்கு வந்த யாவோ, தனது விசா காலாவதியான பின்னரும் சட்டவிரோதமாக இந்தியாவில் தங்கியுள்ளார். துவக்கத்தில் தனது செலவுகளுக்காக சிறியளவில் கொகைன் விற்பனை செய்து வந்த அவர் பின்னாள்களில் மிகப்பெரிய அளவிலான போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்துள்ளார்.

முன்னதாக, ஹரியாணாவின் குருகிராம் மாவட்டத்தில் கைது செய்யப்பட்டு போந்த்சி சிறையில் அடைக்கப்பட்ட யாவோ, அங்கு ஏற்கனவே போதைப் பொருள் கடத்தல் வழக்கில் தண்டனைப் பெற்றிருந்த பிகாஸை சந்தித்துள்ளார். இருவரும் விடுதலையான பின்னர் ஒன்றிணைந்து போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்ததுள்ளனர்.

காவல் துறையினரிடம் சிக்கிக்கொள்ளாமல் இருக்க போதைப் பொருள் விநியோகிக்கும் இடங்களில் பிகாஸ் உளவு பார்க்க, யாவோ அதனை விற்பனை செய்து வந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கூவத்தூரில் நடந்தது என்ன தெரியுமா? இபிஎஸ் குறித்து உண்மையை உடைத்த தினகரன்!

மாணவர்களுக்கு வட்டியில்லா கல்விக்கடன் திட்டம்: பிகார் அரசு!

வங்க தேசத்தில் குவிக்கப்படும் அமெரிக்க ராணுவம்! காரணம் என்ன?

ஆம்பூர் இளைஞர் கொலை: உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த இருவர் கைது!

நாடு கடத்தப்படத் தயாராக இருங்கள்: கிர்க்கின் கொலையைக் கொண்டாடும் வெளிநாட்டவருக்கு அமெரிக்க செயலர் எச்சரிக்கை!

SCROLL FOR NEXT