காதலர் தினத்தில் நிமிடத்துக்கு 581 சாக்லெட்டுகள் மற்றும் 607 கேக்குகள் விற்பனையானதாக ஸ்விக்கி விநியோக தளத்தின் துணை நிறுவனர் பானி கிஷான் தகவல் தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு காதல் நாளன்று விற்பனை குறித்த தகவலை ஸ்விக்கி நிறுவனம் வெளியிட்டுள்ளது.
ஸ்விக்கி விநியோக தளம் வெளியிட்டத் தகவலில், பிப் 14 ஆம் தேதி காதலர் தினத்தில் நிமிடத்திற்கு 581 சாக்லெட்களும் 607 கேக்களும் விற்பனையானதாக தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க: பொரித்த உணவுகளைச் சாப்பிடுகிறீர்களா? எண்ணெய் பற்றிய கவனம் தேவை!
ஸ்விக்கி விநியோக தளத்தின் துணை நிறுவனர் பானி கிஷான் தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில், "காதலர் நாளன்று ஒரு நிமிடத்திற்கு 581 சாக்லெட்டுகளும், 324 ரோஜா பூக்களும் விற்பனை செய்யப்பட்டன. காதலுக்கு பங்குச் சந்தை இருந்தால் இதுதான் காளையின் ஓட்டம்.
தில்லி வாடிக்கையாளர்கள் 24 ஆர்டர்களில் 174 சாக்லெட்டுகளுக்கு ரூ. 29,844-க்கு செலவழித்தனர். இந்தாண்டு காதலர் நாள் சாக்லெட் விற்பனையானது, கடந்தாண்டைவிட இரு மடங்கு அதிகம். வழக்கமான வெள்ளிக்கிழமை விற்பனையைவிட, பிப். 14 ஆம் தேதி ஐந்து மடங்கு விற்பனையானது என்று குறிப்பிட்டுள்ளார்.
காதலர் நாளையொட்டி தமிழ்நாட்டிலும் பலவிதமான ரோஜாப் பூக்களின் விற்பனை அதிகரித்து காணப்பட்டது.
கொத்தாக ஒரே கட்டில் 20 ரோஜாக்களைக் கொண்ட பூங்கொத்து போன்ற தாஜ்மஹால் ரோஜா ரூ.500 வரையிலும் விற்பனையானது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.