தற்போதைய செய்திகள்

பிப். 25-ல் தமிழ்நாட்டுக்கு வரும் அமித் ஷாவுக்கு எதிராக காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்!

வருகிற பிப். 25ல் தமிழ்நாட்டுக்கு வரும் அமித் ஷாவுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என காங்கிரஸ் அறிவிப்பு.

DIN

வருகிற பிப். 25 ஆம் தேதி தமிழ்நாட்டுக்கு வருகைதரும் அமைச்சர் அமித் ஷாவுக்கு எதிராக கறுப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தமிழக காங்கிரஸ் கமிட்டி அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை தனது எக்ஸ் பக்கத்தில்,

"புரட்சியாளர் அம்பேத்கரை இழிவுபடுத்திப் பேசியும் தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்குவதில் பாரபட்சம் காட்டும் மத்திய அரசைக் கண்டிக்கும் விதமாக கோவையில் ஈஷா யோகா மையத்தில் நடைபெறும் சிவராத்திரி விழாவில் பங்கேற்க பிப்ரவரி 25-ல் வருகை தரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு எதிராக எனது தலைமையில் மாபெரும் கறுப்புக் கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்" என்று பதிவிட்டுள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, கோவையில் உள்ள ஈஷா மையத்தில் நடைபெறும் சிவராத்திரி விழாவில் கலந்துகொள்ள தமிழகம் வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இரு நாள்களுக்கு முன்பு மத்திய அரசின் பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ஆந்திரம், ஒடிசா உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு 1,555 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உத்தரவிட்டிருந்தார். ஃபென்ஜால் புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு நிதி ஒதுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உலக மகளிர் உச்சி மாநாட்டை தொடக்கி வைத்த முதல்வர் ஸ்டாலின்!

காஞ்சி மடத்துக்குத் திரும்பிய யானைகள்!

கூட்டணிக் கட்சியை இழிவுபடுத்துவதா? திமுக நிர்வாகிக்கு செல்வப்பெருந்தகை கண்டனம்!

தள்ளிப் போகிறது ஜன நாயகன்! தனி நீதிபதி தீர்ப்பை ரத்து செய்தது உயர்நீதிமன்றம்!

தவெகவுடன் கூட்டணி வைக்க டிடிவி தினகரன் விரும்பினார்! செங்கோட்டையன்

SCROLL FOR NEXT