ஹரியாணா மாநிலம் சோனிபட் மாவட்டத்திலுள்ள பிளாஸ்டிக் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
சோனிபட் மாவட்டத்தின் பிளாஸ்டிக் பொருள்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் இன்று (பிப்.24) பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தில் ஏராளமான பொருள்கள் தீயில் எரிந்து நாசமானதாகக் கூறப்படும் நிலையில் இதனால் அங்குள்ள மக்களுக்கு ஏதேனும் படுகாயமோ அல்லது உயிர்சேதமோ ஏற்பட்டதா என்ற தகவல்கள் தற்போது வரை தெரிவிக்கப்படவில்லை.
இதையும் படிக்க: மகா கும்பமேளா குறித்து சமூக ஊடகங்களில் தவறான தகவல்கள்: 140 பேர் மீது வழக்குப்பதிவு!
இதனைத் தொடர்ந்து, தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டதுடன், 5 தீயணைப்பு வாகனங்கள் மூலம் சில மணி நேரங்களில் அந்த தீயானது கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
மேலும், இந்த விபத்திற்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருவதாகக் கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.