தற்போதைய செய்திகள்

நிறைவடைகிறது பாக்கியலட்சுமி தொடர்!

பாக்கியலட்சுமி தொடர் நிறைவடைவது தொடர்பாக....

DIN

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடர் விரைவில் நிறைவடைகிறது.

கணவரால் ஏமாற்றப்பட்டு கைவிடப்படும் பெண், தன்னுடைய உழைப்பினால் எப்படி சுயமாக முன்னேறுகிறாள் என்பதை மையமாகக் கொண்டு இத்தொடர் எடுக்கப்பட்டு வருகிறது.

இளைய தலைமுறை ரசிகர்களும் விரும்பிப் பார்க்கும் தொடராக பாக்கியலட்சுமி தொடர் உள்ளது. இத்தொடர் டிஆர்பியிலும் முன்னிலையில் உள்ளது.

பாக்கியலட்சுமி தொடர் கடந்த 2020ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வரும் நிலையில், இத்தொடர் விரைவில் நிறைவடையவுள்ளதாக கோபி பாத்திரத்தில் நடிக்கும் சதீஷ் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் சூசகமாக தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டப் பதிவில், “பாக்கியலட்சிமி என்ற பொதுத்தேர்வு முடியும் நேரம் வந்துவிட்டது. நான் தேர்ச்சியடைந்தேனா? இல்லை தோல்வியடைந்தேனா? என்பது ரசிகர்கள் என்ற உங்கள் கையில் இருக்கின்றது. மனதிலும் உடலிலும் சோர்வடைந்து விட்டேன்.

இருப்பினும் முயற்சி தொடரும். நல்ல நடிகன் என்ற இலக்கை அடைய இன்னும் என் பயணம் தொடரும். நன்றி. வாழ்த்துகள்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

நடிகர் சதீஷ் வெளியிட்டுள்ளப் பதிவின்படி பாக்கியலட்சுமி தொடர் விரைவில் நிறைவடையவுள்ளதாகத் தெரிகிறது. இத்தொடரின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருவதாகவும் தகவல் தெரியவந்துள்ளது.

கிட்டத்தட்ட 4 ஆண்டுகளுக்கு மேல் பாக்கியலட்சுமி தொடர் ஒளிபரப்பாகி வரும் நிலையில், இத்தொடர் விரைவில் நிறைவடையவுள்ளது ரசிகர்களுக்கு சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜோ ரூட்டை வம்பிழுத்தது ஏன்? பிரசித் கிருஷ்ணா விளக்கம்!

தேர்தல் ஆணையத்துக்கு எதிராக ஆதார அணுகுண்டை வெடிக்கச் செய்யுங்கள்: ராகுலுக்கு ராஜ்நாத் சவால்!

உலகிலேயே தந்தையை வேவு பார்த்த மகன் அன்புமணிதான்! - ராமதாஸ்

பசி, பட்டினி, வலி, அச்சம்... காஸாவில் மக்கள் ஒரு நாளை எப்படிக் கழிக்கிறார்கள்?

“உடல்நலம் பாதிக்கப்பட்டாலும் மக்கள்பணி ஆற்ற வேண்டும்!” முதல்வர் MK Stalin | DMK

SCROLL FOR NEXT