மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்த இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் 
தற்போதைய செய்திகள்

மீனாட்சி அம்மன் கோவில் மதுரையின் பெருமை: ஞானேஷ்குமார்

தோ்தல் ஆணையம் எப்போதும் வாக்காளா்களுக்குத் துணை நிற்கும் என்றும், மதுரையின் அனைத்து வாக்காளர்களுக்கும் எனது நல்வாழ்த்துகள்

DIN

மதுரை: சமீபத்தில் புதிய தலைமைத் தேர்தல் ஆணையராக பதவியேற்ற ஞானேஷ் குமார் தனது குடும்பத்தினருடன் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தவர், மீனாட்சி அம்மன் கோவில் மதுரையின் பெருமை என தெரிவித்தார்.

சமீபத்தில் 26 ஆவது இந்திய தலைமைத் தேர்தல் ஆணையராக பதவியேற்ற ஞானேஷ் குமார் புதன்கிழமை மதுரை வந்தார்.

அவர் உலக பிரசித்திப்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தனது குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார்.

கோவில் நிர்வாகம் சார்பாக அவருக்கு மரியாதை வழங்கப்பட்டது. தொடர்ந்து கோவிலில் மீனாட்சி அம்மன் சன்னதி மற்றும் சுந்தரேஸ்வரர் சன்னதிக்கு சென்று சிறப்பு வழிபாடு செய்தார். மேலும் பொற்றாமரை குளத்தில் நின்று குடும்பத்துடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

பின்னர் அவர் செய்தியாளர்களுடன் பேசுகையில், மதுரையில் தேர்தல் செயல்முறைகளை குறித்து ஆய்வு செய்தேன், அவர்கள் நல்லமுறையில் பணிகளைச் செய்துள்ளனர்.

தேசக் கட்டமைப்பில் முதல் படியே வாக்களிப்பதுதான். எனவே, 18 வயதைப் பூா்த்தி செய்த ஒவ்வோா் இந்திய குடிமக்களும் ஆட்சியாளா்களைத் தோ்ந்தெடுப்பவா்களாக உருவெடுக்க வேண்டும், எப்போதும் வாக்களிக்கவும் வேண்டும். தோ்தல் ஆணையம் எப்போதும் வாக்காளா்களுக்குத் துணை நிற்கும் என்றும், மதுரையின் அனைத்து வாக்காளர்களுக்கும் எனது நல்வாழ்த்துகள் என ஞானேஷ் குமாா் தெரிவித்தாா்.

மேலும், மீனாட்சி அம்மன் கோவில் மதுரையின் பெருமை என கூறினார்.

தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக், மாவட்ட ஆட்சியர் எம்.எஸ். சங்கீதா மற்றும் பிற அதிகாரிகள் உடன் இருந்தனர்.

பின்னர், ராமேசுவத்தில் உள்ள ராமநாத சுவாமி கோவிலுக்குச் செல்ல இருப்பதாக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

சமீபத்தில் பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் தனது குடும்பத்தினருடன் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

4 சுங்கச் சாவடிகள்: 50% கட்டணத்தை செலுத்த தமிழ்நாடு அரசு முடிவு! - நீதிமன்றத்தில் தகவல்

ஐஐடி மும்பையில் விடுதியின் கட்டடத்தில் இருந்து குதித்து மாணவர் தற்கொலை

நான் துரோகம் செய்யவில்லை, தற்கொலைக்கு முயன்றேன்..! விவாகரத்து பற்றி சஹால்!

மாலை மலர்ந்த ஊதா... அம்ரிதா ஐயர்!

மோடியின் கைப்பாவையாக மாறிய தேர்தல் ஆணையம்: கார்கே குற்றச்சாட்டு!

SCROLL FOR NEXT