தற்போதைய செய்திகள்

தங்கம் விலை இன்று எவ்வளவு குறைந்தது தெரியுமா?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை (பிப். 27) பவுனுக்கு ரூ. 320 குறைந்து ரூ. 64,080-க்கும் விற்பனையாகிறது.

DIN

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை (பிப். 27) பவுனுக்கு ரூ. 320 குறைந்து ரூ. 64,080-க்கும் விற்பனையாகிறது.

கடந்த சில நாள்களாக ஆபரணத் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கமாக இருந்து வந்த நிலையில், ஆபரணத் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கமாக இருந்து வரும் நிலையில், சனிக்கிழமை பவுனுக்கு ரூ.160 உயா்ந்து ரூ.64,360-க்கும்,திங்கள்கிழமை கிராமுக்கு ரூ.10 உயா்ந்து ரூ.8,055-க்கும், பவுனுக்கு ரூ.80 உயா்ந்து ரூ.64,440-க்கும், செவ்வாய்க்கிழமை பவுனுக்கு ரூ.160 உயர்ந்து, ரூ. 64,600-க்கும் கிராமுக்கு ரூ. 20 உயர்ந்து புதிய உச்சத்தைத் தொட்ட நிலையில், புதன்கிழமை அதிரடியாக பவுனுக்கு ரூ.200 குறைந்து, ரூ.64,400-க்கு விற்பனையானது.

இந்த நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை மேலும் கிராமுக்கு ரூ. 40 குறைந்து ரூ. 8,010-க்கும் , பவுனுக்கு ரூ. 320 குறைந்து ரூ. 64,080-க்கும் விற்பனையாகிறது.

அதேபோல், வெள்ளி விலை தொடா்ந்து 4 ஆவது நாளாக எவ்வித மாற்றமுமின்றி கிராம் ரூ.106-க்கும் ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.1,06,000-க்கும் விற்பனையாகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

துரை வைகோ மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் - | MDMK | Mallai Sathya | Vaiko | Political Interview

பாமக எனது கட்சி, நான்தான் தலைவர்! அன்புமணி பொதுக்குழுவை கூட்டுவது சட்டவிரோதம்! பாமக நிறுவனர் ராமதாஸ் பேட்டி

ஒடிஸாவில் தீ வைக்கப்பட்ட மாணவி: 2 வாரமாக உயிர் பிழைக்க போராடிய நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

நயினார் நாகேந்திரன் இனியாவது உண்மை பேச வேண்டும்: ஓ. பன்னீர் செல்வம்

இந்தியா - இங்கிலாந்து கடைசி டெஸ்ட்டை நேரில் கண்டுகளிக்கும் ரோஹித் சர்மா!

SCROLL FOR NEXT