வானிலை ஆய்வு மையம் 
தற்போதைய செய்திகள்

குமரி, நெல்லைக்கு கனமழை! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

குமரி, நெல்லை மாவட்டங்களில் இன்று(ஜன. 1) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

DIN

குமரி, நெல்லை மாவட்டங்களில் இன்று(ஜன. 1) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

இதையும் படிக்க:

இதன் காரணமாக இன்று (ஜன. 1), தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நீலகிரி மற்றும் கொடைக்கானல் (திண்டுக்கல் மாவட்டம்) பகுதிகளில் இரவு நேரங்களில் ஓரிரு இடங்களில் உறை பனிக்கு வாய்ப்புள்ளது.

02-01-2025: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆகாயம் முகம் பார்க்கிறது... மோனாமி கோஷ்

அழகிய... ஐஸ்வர்யா சர்மா!

ரூ.21,000 சம்பளத்தில் குழந்தைகள் சேவை மையத்தில் வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் தென்னாப்பிரிக்கா முன்னேற்றம்! இந்திய அணிக்கு பின்னடைவு!

கேரளத்தில் டிச. 9 உள்ளாட்சி தேர்தல்: 2.86 கோடி வாக்காளர்களில் பெண்களே அதிகம் - தேர்தல் ஆணையம்

SCROLL FOR NEXT