தற்போதைய செய்திகள்

மகிழ்ச்சி செய்தியைப் பகிர்ந்த சின்ன திரை நடிகர்!

தந்தையாகப்போவதை அறிவித்த சின்ன திரை நடிகர் அவினாஷ்.

DIN

சின்ன திரை நடிகர் அவினாஷ் மகிழ்ச்சி செய்தி ஒன்றினை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அழகு தொடர் மூலம் சின்ன திரையில் நடிகராக அறிமுகமானவர் நடிகர் அவினாஷ். இத்தொடரின் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இவர், அடுத்தடுத்து அம்மன், சாக்லேட் உள்ளிட்ட தொடர்களில் நடித்திருந்தார்.

இதனிடையே கயல் தொடரில் நடித்துவந்த அவினாஷ், திடீரென்று இத்தொடரில் இருந்து விலகினார். தற்போது இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் வீட்டுக்கு வீடு வாசப்படி தொடரில் கண்ணன் பாத்திரத்தில் நடித்து வருகிறார்.

நடிகர் அவினாஷ் பள்ளிக் காலத்தில் இருந்து கிட்டத்தட்ட 13 ஆண்டுகள் காதலித்து வந்த தெரசா மரியாவை கடந்த செப்டம்பரில் திருமணம் செய்துகொண்டார்.

இதையும் படிக்க: நேசிப்பாயா வெளியீட்டுத் தேதி!

இந்த நிலையில், அவினாஷ் தான் தந்தையாகப்போவதை இன்ஸ்டாகிராமில் ரசிகர்களுக்கு தெரிவித்துள்ளார். மேலும் குழந்தையின் ஸ்கேன் ரிப்போர்ட்டுடன் புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார். இப்புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அவினாஷ் - தெரசா மரியாவுக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

பாக்கியலட்சுமி தொடரில் நடித்துவரும் நடிகை அன்ஷிதாவின் சகோதரர்தான் அவினாஷ் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

துரந்தர் படத்தை வளைகுடா நாடுகளில் திரையிட தடை..! என்ன காரணம்?

தமிழ்நாட்டில் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்படலாம்! - ஆர்.எஸ். பாரதி

”தூய்மைப் பணியாளர்களுக்கு ஊதியம் கொடுக்க அரசிடம் பணம் இல்லாத நிலை..!” அண்ணாமலை குற்றச்சாட்டு

இளங்கலை, முதுகலை தொழிற்கல்வி பயிலும் மாணவா்களுக்கு கல்வி உதவித் தொகை: விண்ணப்பிப்பது எப்படி?

தில்லியில் மிகவும் மோசம் பிரிவில் காற்றின் தரம்: மூச்சு விட சிரமப்படும் மக்கள்!

SCROLL FOR NEXT