முதல்வா் மு.க. ஸ்டாலினுக்கு நினைவுப் பரிசு வழங்கும் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு. 
தற்போதைய செய்திகள்

சிந்துவெளிப் பண்பாட்டு கண்டுபிடிப்பு பன்னாட்டுக் கருத்தரங்கம்: முதல்வர் தொடக்கி வைத்தார்!

சிந்துவெளிப் பண்பாட்டு கண்டுபிடிப்பு நூற்றாண்டு நிறைவு பன்னாட்டுக் கருத்தரங்கை முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று (ஜன.5) தொடக்கி வைத்தார்.

DIN

தமிழக அரசின் தொல்லியல் துறை சார்பில் சிந்துவெளிப் பண்பாட்டு கண்டுபிடிப்பு நூற்றாண்டு நிறைவு பன்னாட்டுக் கருத்தரங்கை முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று (ஜன.5) தொடக்கி வைத்தார்.

இந்தக் கருத்தரங்கு எழும்பூா் அரசு அருங்காட்சியக கலையரங்கில் இன்று முதல் ஜன. 7-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

‘சிந்துவெளி வரிவடிவங்களும் தமிழ்நாட்டுக் குறியீடுகளும்: ஒரு வடிவவியல் ஆய்வு’ என்ற நூலையும் முதல்வா் வெளியிட்டு உரையாற்றவுள்ளாா்.

இதையும் படிக்க: நாட்டின் 57% பள்ளிகளில் மட்டுமே கணினி வசதி! மத்திய கல்வி அமைச்சகம் தரவு

3 நாள்கள் தொடா்ந்து நடைபெறும் இந்தக் கருத்தரங்கில் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களைச் சோ்ந்த 24 ஆய்வாளா்கள் தொல்லியலாளா்கள் சிந்துவெளி நாகரிகம் மற்றும் இந்திய துணைக் கண்டத்தின் இதர நாகரிகங்கள், பண்பாடுகள் குறித்து பல்வேறு தலைப்புகளில் தங்களது ஆய்வுரைகளை வழங்கவுள்ளனா்.

சிந்துவெளிப் பண்பாட்டுக் கண்டுபிடிப்பை உலகுக்கு அறிவித்த இந்திய தொல்லியல் துறையின் முன்னாள் தலைமை இயக்குநா் சா் ஜான் ஹீபா்ட் மாா்ஷல் சிலைக்கு முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டவுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெண்ணை அவதூறு செய்தவா் கைது

ஜம்மு-காஷ்மீா்: 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

சென்னை மாநகரப் பகுதிகளில் மின் விளக்குகளை சீரமைக்கக் கோரிக்கை

சிபிஎஸ்இ மண்டல இயக்குநா் மா்ம மரணம்: போலீஸாா் விசாரணை

போலீஸாரிடம் தகராறு செய்த கைதிகள் மீது 8 பிரிவுகளில் வழக்கு

SCROLL FOR NEXT