மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள பெ. சண்முகம்-மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினர் சு. வெங்கடேசன்  
தற்போதைய செய்திகள்

மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் பெ.சண்முகத்துக்கு சு.வெங்கடேசன் எம்.பி. வாழ்த்து!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள பெ. சண்முகத்துக்கு மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினர் சு. வெங்கடேசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

DIN

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள பெ. சண்முகத்துக்கு மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினர் சு. வெங்கடேசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

விழுப்புரத்தில் நடைபெற்று முடிந்த மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-ஆவது மாநில மாநாட்டில் அந்த கட்சியின் மாநிலச் செயலாளராக பெ. சண்முகம் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

மலைவாழ் மக்கள் சங்கத்தின் தலைவராக பதவி வகித்த பெ. சண்முகம், வாச்சாத்தி வன்கொடுமை வழக்கை இறுதிவரை நடத்தியவர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இளைஞர் அமைப்பு மற்றும் விவசாய சங்க மாநிலச் செயலாளர் பொறுப்புகளையும் வகித்தவர்.

இந்த நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள பெ. சண்முகத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இதனிடையே திடீர் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினர் சு. வெங்கடேசன், கட்சி மாநிலச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள பெ. சண்முகத்துக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,

விழுப்புரத்தில் நடைபெற்று வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில 24 வது மாநாட்டில் தோழர் பெ.சண்முகம் அவர்கள் மாநிலச் செயலாளராக ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

மாநாட்டில் 81 பேர் கொண்ட புதிய மாநிலக்குழுவும் , 15 பேர் கொண்ட புதிய மாநில செயற்குழு தேர்வு செய்யப்பட்டது. மாநில செயற்குழு உறுப்பினர்களாக உ.வாசுகி , குணசேகரன், கனகராஜ் , மதுக்கூர் ராமலிங்கம் , சு.வெங்கடேசன், பாலபாரதி , ஜி.சுகுமாறன், சாமுவேல்ராஜ், எஸ்.கண்ணன் , என்.பாண்டி, டி.ரவீந்திரன், முத்துகண்ணன் , அர்ச்சுணன், க.சுவாமிநாதன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

மாநிலக்குழு மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்களுக்கு வாழ்த்துகள் என தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விஜய் தேவரகொண்டா-கீர்த்தி சுரேஷ் நடிக்கும் புதிய படத்தின் பூஜை - புகைப்படங்கள்

அமைச்சர் பதவி வேண்டாம்: வருமானம் குறைந்துவிட்டது; சினிமாவில் நடிக்கப் போகிறேன்! - சுரேஷ் கோபி

பிகார் தேர்தல்: பாஜக 101, ஐக்கிய ஜனதா தளம் 101 தொகுதிகளில் போட்டி!

உலகக் கோப்பை: ஸ்மிருதி, பிரதீகா அசத்தல்; ஆஸி.க்கு 331 ரன்கள் இலக்கு!

இந்த வராம் கலாரசிகன் - 12-10-2025

SCROLL FOR NEXT