மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜிக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி பிறந்தநாளையொட்டி, அவருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி பிறந்தநாளையொட்டி, அவருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
திரிணமூல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மமதா பானர்ஜி பிறந்தநாளையொட்டி, அவருக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மமதாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Advertisement
Advertisement
இது தொடர்பாக அவர் சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,
மேற்கு வங்க முதல்வர் செல்வி. மமதா பானர்ஜிக்கு என் பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.
பொதுவாழ்வின்மீது தாங்கள் கொண்டுள்ள அர்ப்பணிப்பினால் தொடர்ந்து பல நல்மாற்றங்கள் விளையட்டும்!
தாங்கள் நீண்டகாலம் மகிழ்ச்சியோடும் வலிமையோடும் வெற்றியோடும் திகழ விழைகிறேன் என கூறியுள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.