கூட்டத்தில் இருந்த ஒருவரை அந்த யானை தூக்கி வீசிய விடியோ. 
தற்போதைய செய்திகள்

மலப்புரம் திருவிழாவில் யானை தாக்கியதில் படுகாயமடைந்த ஒருவர் பலி!

மலப்புரத்தில் மசூதி திருவிழாவின்போது யானை மிரண்டு ஓடியதில் படுகாயமடைந்தவர் பலியாகியதைப் பற்றி...

DIN

கேரள மாநிலம் மலப்புரத்தில் மசூதி திருவிழாவின்போது அழைத்து வரப்பட்ட யானை தாக்கியதில் படுகாயம் அடைந்த ஒருவர் இன்று பலியாகியுள்ளார்.

மலப்புரத்தின் திரூரிலுள்ள மசூதி திருவிழாவிற்காக கடந்த ஜன.8 அன்று யானை ஒன்று அழைத்து வரப்பட்டது. ஊர்வலமாக சென்றுக் கொண்டிருந்த யானைக்கு திடீரென மதம் பிடித்து அருகிலிருந்தவர்களை தாக்கியது.

அப்போது எழூரைச் சேர்ந்த கிருஷ்ணகுட்டி (வயது 59) என்பரை அந்த யானை தனது தும்பிக்கையால் தூக்கி வீசியது. இதில் படுகாயம் அடைந்த அவர் கோட்டக்கலிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார்.

இதையும் படிக்க: நானும் மனிதன்தான், தவறு செய்திருக்கலாம்: பிரதமர் மோடியின் முதல் நேர்காணல்

அவரது உடல் நிலை தொடர்ந்து மிகவும் மோசமாக உள்ளதாகக் கூறப்பட்டிருந்த நிலையில், இன்று (ஜன.10) அவர் சிகிச்சைப் பலனின்றி பலியானார்.

முன்னதாக, திருவிழாவின் போது மதம் பிடித்து மிரண்டு ஒடிய யானையிடம் இருந்து தப்பித்து ஒட முயன்றவர்கள் ஒருவரின் மீது ஒருவர் விழுந்ததில் 20 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

பின்னர், நீண்ட நேர முயற்சிக்கு பிறகு அந்த யானை பாகன்களால் கட்டுப்படுத்தப்பட்டு சங்கிலியில் பிணைக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

செவ்வானம்... திவ்ய பாரதி!

மேகம்... ரித்திகா நாயக்!

திஷா பதானியின் வீட்டிற்கு வெளியே துப்பாக்கிச் சூடு! குற்றவாளிகள் சுட்டுக்கொலை!

அமெரிக்க வரி விதிப்பால் ஆட்டோமொபைல் உதிரிபாக உற்பத்தி 8% பாதிப்பு!

பில் சால்ட் அதிரடி: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இங்கிலாந்து!

SCROLL FOR NEXT