தற்போதைய செய்திகள்

ஃபேமிலி படம் ஓடிடி வெளியீட்டுத் தேதி!

'ஃபேமிலி படம்' திரைப்படம் ஓடிடியில் நாளை(ஜன. 15) வெளியாகிறது.

DIN

'ஃபேமிலி படம்' திரைப்படம் ஓடிடியில் நாளை(ஜன. 15) வெளியாகிறது.

யு.கே. கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் வெளியான படம் 'ஃபேமிலி படம்'. டைனோசார் பட புகழ் உதய் கார்த்திக் கதாநாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக சுபிக்‌ஷா கயா நடித்துள்ளார்.

விவேக் பிரசன்னா, ஸ்ரீஜா ரவி, பட்டிமன்ற பிரபலம் மோகனசுந்தரம், பார்த்திபன் குமார் மற்றும் கவின் உள்ளிட்டோர் பிரதான பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

கதை, திரைக்கதை, வசனம் எழுதி இப்படத்தை இயக்கியுள்ளார் செல்வகுமார் திருமாறன். அனிவி பாடல்களுக்கு இசையமைக்க, 'விலங்கு' இணையத்தொடரில் தனது இசையின் மூலம் மிரட்டிய அஜிஷ் இப்படத்தின் பின்னணி இசையை அமைத்துள்ளார்.

இந்த நிலையில், 'ஃபேமிலி படம்' திரைப்படம் நாளை(ஜன. 15) ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

யு19 உலகக் கோப்பைத் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு! கேப்டன் யார் தெரியுமா?

‘சேலம் பொதுக்குழு தீா்மானங்கள் பாமகவை கட்டுப்படுத்தாது’

சல்மான் கானை நேரில் வாழ்த்திய தோனி! நள்ளிரவில் சுவாரசியம்!

கரை ஒதுங்கிய ராக்கெட் போன்ற மர்மப் பொருள்! தீவிர சோதனையில் வெடிகுண்டு நிபுணர்கள்!

2025! காஸா முதல் காஷ்மீர் வரை... உலகம் போர்க்களமான கதை!

SCROLL FOR NEXT