மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் 
தற்போதைய செய்திகள்

ஸ்ரீஹரிகோட்டாவில் 3-வது ராக்கெட் ஏவுதளம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

ஸ்ரீஹரிகோட்டாவில் அமையவுள்ள 3-வது ராக்கெட் ஏவுதளம் குறித்து...

DIN

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் 3-வது ராக்கெட் ஏவுதளம் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

ஸ்ரீஹரிகோட்டாவில் இஸ்ரோவின் சதீஷ் தவான் வி்ண்வெளி ஆய்வு மையத்தில் 3-வது ராக்கெட் ஏவுதளம் அமைக்க பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல் தெரிவித்துள்ளார்.

இந்த ராக்கெட் ஏவுதளம் 48 மாதங்களில் கட்டி முடிக்க திட்டமிட்டு இருப்பதாக மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். 3-வது ஏவுதளம் ரூ. 3,985 கோடி செலவில் அமைகிறது.

இது விண்வெளி உள்கட்டமைப்புத் துறையின் முக்கிய மைல்கல்லாக இருக்கும் என்றும் முதல், இரண்டாவது ஏவுதளங்களுடன் ஒப்பிடும்போது மூன்றாவது ஏவுதளத்தின் திறன் அதிகமாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனிதனை விண்வெளிக்கு அனுப்புதல் உள்ளிட்ட எதிர்கால திட்டத்திற்காக ஸ்ரீஹரிகோட்டாவில் 3-வது ராக்கெட் ஏவுதளம் அமையவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தியா எந்த அச்சுறுத்தலுக்கும் அடிபணியாது: வெங்கையா நாயுடு

என்எல்சி நிகர லாபம் ரூ.839.21 கோடி

ரிஷப ராசிக்கு தன்னம்பிக்கை! தினப்பலன்கள்!

ரூ.2,250 கோடியில் விரைவில் ஏற்றுமதி ஊக்குவிப்பு திட்டம்: அதிகாரிகள் தகவல்

பழங்குடியினரின் வாழ்வியலை ஆவணப்படுத்த தொல்குடி மின்னணு களஞ்சியம் இணையம்: அமைச்சா் மதிவேந்தன் தொடங்கி வைத்தாா்

SCROLL FOR NEXT