நினைத்தேன் வந்தாய் தொடர் நிறைவு!
கணேஷ் வெங்கட்ராமன் நாயகனாக நடித்துவந்த சீரியல் நிறைவு.
கணேஷ் வெங்கட்ராமன் நாயகனாக நடித்துவந்த நினைத்தேன் வந்தாய் தொடர் நிறைவடைந்துள்ளது.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த தொடர் நினைத்தேன் வந்தாய்.
இத்தொடரில் கணேஷ் வெங்கட்ராமன் நாயகனாகவும் அவருக்கு ஜோடியாக கீர்த்தனாவும் நடித்து வந்தனர். கதைப்படி கீர்த்தனா இறந்துவிட்ட நிலையில் அவரின் தங்கையான அபிராபி (சுடர்) கணேஷுக்கு ஜோடியாக நடித்து வந்தார்.
Advertisement
Advertisement
இதையும் படிக்க: சத்ரபதி சம்பாஜி மனைவியாக ரஷ்மிகா: போஸ்டர் வெளியீடு!
மருத்துவரான கணேஷ் வெங்கட்ராமனின் குழந்தைகளை பரமரிக்கும் பணிக்காக கணேஷ் வீட்டிற்கு வரும் சுடர் என்ற பாத்திரத்தை மையமாகக் கொண்டு நினைத்தேன் வந்தாய் தொடர் எடுக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில், நினைத்தேன் வந்தாய் தொடர் 285 எபிசோடுகளுடன் நிறைவடைந்தது. இத்தொடர் தொடங்கப்பட்ட ஒரே வருடத்தில் நிறைவடைந்துள்ளது இத்தொடர் பார்க்கும் ரசிகர்களை சற்று அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
முன்னதாக நடிகை ரேஷ்மா முரளிதரன் நடித்துவந்த நெஞ்சத்தைக் கிள்ளாதே சீரியலும் 6 மாதத்திலேயே நிறைவடைந்த நிலையில், நினைத்தேன் வந்தாய் தொடர் ஒரு வருடத்தில் நிறைவடைந்துள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.