கைதான ஞானசேகரன் (கோப்புப்படம்) 
தற்போதைய செய்திகள்

அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வழக்கு: ஞானசேகரன் மருத்துவமனையில் அனுமதி!

போலீஸ் காவலில் உள்ள ஞானசேகரன் மருத்துவமனையில் அனுமதி.

DIN

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரனுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக கோட்டூரைச் சோ்ந்த ஞானசேகரன் கைது செய்யப்பட்டாா். இந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆா்) பொது வெளியில் வெளியாகி அதிா்வலைகளை ஏற்படுத்தியது.

இதையடுத்து சென்னை உயா்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை செய்து, சென்னை பெருநகர காவல் துறை அண்ணா நகா் துணை ஆணையா் புக்யா சினேக பிரியா, ஆவடி மாநகர காவல் துணை ஆணையா் அய்மன் ஜமால், சேலம் மாநகர காவல் துணை ஆணையா் பிருந்தா ஆகியோா் கொண்ட சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்து உத்தரவிட்டது.

மேலும், மாணவி பாலியல் வன்கொடுமை வழக்குடன், முதல் தகவல் அறிக்கை கசிந்த வழக்கையும் சோ்த்து சிறப்பு புலனாய்வுக் குழு விரைவாக விசாரிக்கும் என்று உயா்நீதிமன்றம் தெரிவித்தது.

இதையும் படிக்க: திருச்சி விமான நிலையத்தில் ரூ. 26 லட்சம் தங்கம் பறிமுதல்

ஞானசேகனின் கைப்பேசியில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட விடியோக்கள், புகைப்படங்களில் இருக்கும் பெண்களின் விவரங்களும், அதில் தொடா்புடையவா்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

விசாரணையில் ஞானசேகரன் அளிக்கும் பதில்கள் அனைத்தும், எழுத்து பூா்வமாகவும் விடியோவாகவும் பதிவு செய்யப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

இவ்வழக்கில் கைதான ஞானசேகரனிடம் சிறப்பு புலனாய்வுக்குழுவினர் 7 நாள்கள் விசாரிக்க அனுமதி அளித்து சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் முன்னதாக உத்தரவிட்டது.

இந்த நிலையில், போலீஸ் காவலில் உள்ள ஞானசேகரனுக்கு பக்கவாதம் ஏற்பட்டதையடுத்து ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இணையம் முழுக்க அகரம் சூர்யா!

ஜார்க்கண்ட் வரலாற்றின் ஒரு அத்தியாயம் முடிவுக்கு வந்தது: மமதா இரங்கல்

தங்கம் - வெள்ளி விலை: இன்றைய நிலவரம்!

சிபு சோரன் மறைவு: மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு

வின்ஃபாஸ்ட் ஆலையை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT