தற்போதைய செய்திகள்

கவனம் ஈர்க்கும் அதிதி ஷங்கரின் பைரவம் டீசர்!

நடிகை அதிதி ஷங்கர் தெலுங்கில் பைரவம் என்ற படத்தின் மூலம் அறிமுகமாகிறார்.

DIN

நடிகை அதிதி ஷங்கர் தெலுங்கில் அறிமுகமாகும் பைரவம் படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

ஷங்கரின் மகளான் அதிதி ஷங்கர் விருமன் படத்தில் அறிமுகமானார். மாவீரன் படத்துக்கு ரசிகர்கள் மத்திய நல்ல வரவேற்பு கிடைத்தது. தற்போது, இவர் ஆகாஷ் முரளியுடன் நடித்த நேசிப்பாயா திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.

அர்ஜுன் தாஸ் உடன் அதிதி நடித்துள்ள ஒன்ஸ் மோர் படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது.

இதையும் படிக்க: சிந்தர். சி பிறந்தநாளில் வெளியான வல்லான் பட டிரைலர்!

இந்நிலையில், நடிகை அதிதி ஷங்கர் தெலுங்கில் பைரவம் என்ற படத்தின் மூலம் அறிமுகமாகிறார். உக்ரம் படத்தை இயக்கிய விஜய் கனகமேடலா இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.

கே.கே.ராதாமோகன் தயாரித்துள்ள இந்தப் படத்தில் நடிகர் பெல்லம்கொண்ட ஸ்ரீனிவாஸ் நாயகனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக அதிதி நடிக்கிறார்.

இப்படத்தின் டீசர் இணையத்தில் வெளியாகி, ரசிகர்களின் கவனத்தைப் பெற்று வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கொல்கத்தாவில் ரயில் நிலைய நடைமேடை கடையில் தீ விபத்து: ரயில் சேவை பாதிப்பு

வெளியே வந்த கமருதீன்: ரசிகர்களுடன் நடனம் ஆடிய விடியோ வைரல்!

வெனிசுவேலாவின் செயல் அதிபர் நான்தான்! டிரம்ப் அதிரடி

அதிரடியாக உயர்ந்த தங்கம், வெள்ளி விலை!

மீன்பிடி படகு மீது மோதிய சுற்றுலா பயணிகள் படகு! இளம் பெண் பலி | Thailand

SCROLL FOR NEXT