மகாராஷ்டிர மாநிலம் தாணேவில் ரூ.5 கோடி மதிப்பிலான திமிங்கில எச்சம் கடத்தியவர் கைது செய்யப்பட்டார்.
தாணே மாவட்டத்தின் ரபோடி பகுதியில் திமிங்கில எச்சம் கடத்தப்படுவதாக காவல் துறையினருக்கு கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, புணேவைச் சேர்ந்த நித்தீன் முட்டண்ணா மொரெலு (வயது 53) என்பவரிடம் சோதனை மேற்கொண்டனர். அந்த சோதனையின்போது அவரிடம் இருந்து சுமார் 5.48 கிலோ அளவிலான திமிங்கில எச்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, அவர் மீது இந்திய வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட திமிங்கில எச்சத்தின் மதிப்பானது சுமார் ரூ.5 கோடி எனக் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: கர்நாடகத்தில் கோர விபத்து: காய்கறி லாரி கவிழ்ந்ததில் 10 பேர் பலி!
மேலும், அவர் அதனை யாரிடம் இருந்து வாங்கினார், யாரிடம் விற்க முயன்றார் என்று காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, எண்ணெய் திமிங்கிலங்களின் வயிற்றிலிருந்து உற்பத்தியாகும் 'மிதக்கும் தங்கம்’ என்று வர்ணிக்கப்படும் இந்த எச்சமானது இந்தியாவில் விற்பதற்கும் வாங்குவதற்கும் தடைசெய்யப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.