சிறுவாபுரி முருகன் கோயில். (கோப்புப்படம்) 
தற்போதைய செய்திகள்

சிறுவாபுரி செல்லும் பக்தர்களுக்கு அமைச்சர் சொன்ன குட் நியூஸ்!

சிறுவாபுரி முருகன் கோயிலுக்கு செல்வோருக்கு மாற்றுப்பாதை...

DIN

சிறுவாபுரி முருகன் கோயிலுக்குச் செல்லும் பக்தர்களுக்கு பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ. வேலு புதிய செய்தியை தெரிவித்துள்ளார்.

பக்தர்களின் வசதிக்காக திருத்தணி ரயில் நிலையத்திலிருந்து திருத்தணி முருகன் கோயிலுக்கு செல்லும் இலவச பேருந்து சேவையை அமைச்சர்கள் சேகர்பாபு, எ.வ. வேலு, நாசர் ஆகியோர் தொடக்கிவைத்தனர்.

தொடர்ந்து, சிறுவாபுரி கோயிலுக்கு செல்வதற்காக புதிய வழித்தடம் அமைப்பதற்கான இடத்தை அமைச்சர் எ.வ. வேலு ஆய்வு செய்தார்.

இதனைத் தொடர்ந்து பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சா் எ.வ.வேலு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்ததாவது:

”சிறுவாபுரி முருகன் கோயிலுக்கு பக்தர்கள் செல்வதற்கு மாற்றுப்பாதையாக 4 வழிச்சாலையை ரூ. 45 கோடி மதிப்பீட்டில் அமைக்க திட்டமிட்டுள்ளோம்.

இந்த 4 வழிச்சாலைக்கான பணிகளை 6 மாதங்களில் முடிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. 4.6 கி.மீ. நீளத்திற்கு அமையவுள்ள இந்த சாலைக்காக 12 ஹெக்டர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளன.

இந்த புதிய சாலையால் சிறுவாபுரி முருகனை தரிசிப்பதற்கான வழி எளிதாகும்.” என்று தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமர்நாத் யாத்திரை செல்ல நாளைமுதல் அனுமதியில்லை! காஷ்மீர் நிர்வாகம் அறிவிப்பு

ஏ சான்றிதழ் பெற்ற ரஜினி திரைப்படங்கள்!

எங்கள் கூட்டணியிலிருந்து எந்த கட்சியும் வெளியேறாது: அமைச்சர் கே.என்.நேரு

பாலியல் வழக்கு: பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை!

ஓவல் டெஸ்ட்டில் டிஆர்எஸ் சர்ச்சை; கள நடுவர் செய்தது சரியா?

SCROLL FOR NEXT