தற்போதைய செய்திகள்

மெட்ராஸ்காரன் ஓடிடி வெளியீட்டுத் தேதி!

மெட்ராஸ்காரன் ஓடிடி வெளியீடு தொடர்பாக...

DIN

மெட்ராஸ்காரன் படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

எஸ்ஆர் புரொடக்‌ஷன் பி. ஜகதீஸ் தயாரிப்பில், ரங்கோலி படத்தின் மூலம் அறிமுகமான இயக்குநர் வாலி மோகன் தாஸ் இயக்கத்தில், மலையாள நடிகர் ஷேன் நிகாம், கலையரசன் இணைந்து நடிக்க, திரில்லர் டிராமாவாக திரையரங்குகளில் வெளியான திரைப்படம் “மெட்ராஸ்காரன்”.

இந்தப் படத்தில் நிஹாரிகா கொனிடேலா நாயகியாக நடித்துள்ளார். இப்படம் ஜன. 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாளி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

இதையும் படிக்க: காஞ்சனா - 4 படப்பிடிப்பு துவக்கம்?

இந்த நிலையில், மெட்ராஸ்காரன் படம் வரும் பிப். 7 ஆம் தேதி ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

மலையாளத்தில் புகழ்பெற்ற கும்பளாங்கி நைட்ஸ், ஆர்டிஎக்ஸ், இஷ்க் படப்புகழ் நடிகர் ஷேன் நிகாம் நடிக்கும் முதல் தமிழ்ப்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தியா - இஸ்ரேல் வா்த்தக ஒப்பந்தம் 2 கட்டங்களாகச் செயல்படுத்தப்படும்: பியூஷ் கோயல்

உச்சநீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக சூா்ய காந்த் இன்று பதவியேற்பு!

பலத்த மழை எச்சரிக்கை! தயாா் நிலையில் பேரிடா் மீட்புக் குழுக்கள்!

நொய்டா: எஸ்ஐஆா் பணிகளில் அலட்சியம்! 60 பிஎல்ஓ, 7 கண்காணிப்பு அதிகாரிகள் மீது வழக்கு

நான்கரை ஆண்டுகளில் ரூ.3,117 கோடியில் அரசுப் பள்ளிகளின் உள்கட்டமைப்புகள் மேம்பாடு!

SCROLL FOR NEXT