பிப்ரவரி மாதம் பிரதமர் நரேந்திர மோடி என்னை சந்திக்க வெள்ளை மாளிகைக்கு வருகை தருவார் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இந்தத் தகவலை செய்தியாளர்களுடன் பேசும்போது அமெரிக்க அதிபர் டிரம்ப் உறுதிப்படுத்தியுள்ளார். செய்தியாளர்களிடம் டிரம்ப் பேசியதாவது:
”நீண்ட நேரம் நரேந்திர மோடியுடன் உரையாடினேன். பிரதமர் நரேந்திர மோடி அடுத்த மாதம் அநேகமாக பிப்ரவரியில் வெள்ளை மாளிகைக்கு வருகை தரவுள்ளார். நாங்கள் இந்தியாவுடன் நல்ல உறவுடன் இருக்கின்றோம்” என்று பேசினார்.
பிரதமர் மோடியுன் தொலைபேசியில் பேசியது குறித்து அமெரிக்க அதிபரிடம் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு இவ்வாறு பதிலளித்தார்.
இதையும் படிக்க: தில்லி தோ்தல்: முன்னாள் குடியரசு துணைத் தலைவர் ஹமீது அன்சாரி வாக்குப்பதிவு!
டிரம்ப்புடன் மோடி தொலைபேசியில் பேச்சு
அதிபா் டிரம்ப்புடன் பிரதமா் மோடி தொலைபேசியில் திங்கள்கிழமை பேசினாா். இதுதொடா்பாக பிரதமா் மோடி ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘அமெரிக்க அதிபராக இரண்டாவது முறை பதவியேற்ற்கு டிரம்ப்புக்கு வாழ்த்துத் தெரிவித்தேன். இந்தியா மற்றும் அமெரிக்காவுக்கு பரஸ்பரம் பலன் அளிக்கக் கூடிய நம்பகமான கூட்டுறவைத் தொடர வேண்டும் என்பதில் இருவரும் உறுதியாக உள்ளோம். இருநாட்டு மக்களின் நல்வாழ்வு, உலக அமைதி, வளமை மற்றும் பாதுகாப்புக்கு இருவரும் இணைந்து பணியாற்றுவோம்’ என்றாா்.
பிரதமா் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘தொழில்நுட்பம், வா்த்தகம், முதலீடு, எரிசக்தி, பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் இருநாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து இருவரும் பேசினா். விரைவில் சந்திக்கவும் அவா்கள் தீா்மானித்தனா்’ என்று தெரிவிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.