வெட்டிக் கொலை செய்யபட்ட அன்பு. 
தற்போதைய செய்திகள்

ஸ்ரீரங்கத்தில் ரெளடி வெட்டிக் கொலை!

ரெளடி அன்பு என்பவர் மர்ம கும்பலால் வெட்டி படுகொலை.

DIN

பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் ரெளடி அன்பு மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் ஸ்ரீரங்கம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்ரீரங்கம் தெப்பக்குளத் தெரு பகுதியில் ரெளடி திலீப் தரப்பை சேர்ந்த அன்பு என்பவரை, மர்ம கும்பல் இன்று காலை வெட்டிக் கொலை செய்துள்ளது.

சரித்திரப் பதிவு குற்றவாளியான அன்பு மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், இன்று காலை ஸ்ரீரங்கம் மேலூர் சாலைப் பகுதியில் உடற்பயிற்சி கூடத்துக்கு சென்றுவிட்டு பின்னர் வீட்டிற்கு வரும் வழியில் மர்ம கும்பல் இவரை துரத்தியது.

இதையும் படிக்க: உ.பி. திருவிழாவில் மேடை சரிந்ததில் 7 பேர் பலி; 50-க்கும் மேற்பட்டோர் காயம்!

சுதாரித்துக் கொண்ட அன்பு அங்கிருந்து சுமார் 500 மீட்டர் தூரம் தப்பி ஓடினார், ஆனால் தொடர்ந்து விரட்டி வந்த மர்ம கும்பல் தெப்பக்குளம் பகுதியில் அவரை பிடித்து அரிவாளால் வெட்டிக் கொலை செய்தனர். பின்னர் அந்த மர்ம கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியது.

படுகொலை சம்பவம் குறித்து ஸ்ரீரங்கம் போலீஸார் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பலியான அன்புவின் உடலை பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களின் பேருந்து நிறுத்தப் பகுதியில் நடைபெற்ற படுகொலையைக் கண்டு பக்தர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இயற்கை பாதுகாப்பு சங்கத்தின் பசுமை விருது: செப்டம்பா் 2 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை - தன்பாத், போத்தனூா் - பரௌனி இடையே சிறப்பு ரயில்

பெண் கிராம நிா்வாக அலுவலா் மீது தாக்குதல்: ஒருவா் கைது

பொறியியல் கல்லூரி மாணவா்களுக்கு புத்தாக்கப் பயிற்சி

வீடு புகுந்து நகை திருடிய 3 சிறுவா்கள் கைது

SCROLL FOR NEXT