முதல்வர் ஸ்டாலின். 
தற்போதைய செய்திகள்

விழுப்புரம் மாவட்டத்துக்கு 11 புதிய அறிவிப்புகள்!

ரூ. 304 கோடி செலவில் நந்தன் கால்வாய் திட்டம்.

DIN

விழுப்புரம் மாவட்டத்துக்கு 11 புதிய திட்டங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின்.

விழுப்புரம் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளின் தற்போதைய நிலை குறித்து முதல்வா் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை இரவு ஆய்வு செய்தாா்.

இதனைத் தொடர்ந்து, இன்று(ஜன. 28) விழுப்புரம் நகராட்சி, வழுதரெட்டியில் சமூகநீதிப் போராளிகள் மணிமண்டபம், முன்னாள் அமைச்சா் ஏ.கோவிந்தசாமி நினைவு அரங்கத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.

இதையும் படிக்க: திராவிடக் கட்சிகளுடன் பயணித்தால் பாஜக வாக்கு விகிதம் உயராது: அண்ணாமலை

பின்னர், இந்நிகழ்ச்சியில் விழுப்புரம் மாவட்டத்துக்கான 11 புதிய அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்.

அதில் ரூ. 304 கோடி செலவில் நந்தன் கால்வாய் திட்டம், ரூ. 1.5 கோடியில் விக்கிரவாண்டியில் கக்கன் நகரில் சமுதாய கூடம், கோலியனூரைச் சுற்றுள்ளப் பகுதி மக்கள் பயன்பெறும் வகையில் கூட்டுகுடிநீர் திட்டம்.

திருவாமாத்தூர் அபிராமேஸ்வரர் கோயிலில் இந்துசமய அறநிலையத்துறை சார்பில் ரூ. 4 கோடி மதிப்பில் திருமண மண்டபம், உணவு அருந்தும் இடம், சமையல் கூடம் ஆகியவை அமைக்கப்படும்.

செஞ்சி, மரக்காணத்தில் புதிய தொழிற்பயிற்சி மையங்கள். ரூ. 84 கோடியில் தளவானூர் அணைக்கட்டு சீரமைப்பு உள்ளிட்ட விழுப்புரம் மாவட்டத்துக்கான புதிய அறிவிப்பை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புர்ஜ் கலிஃபாவில் மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்து!

வன்னியா் இடஒதுக்கீடு கோரி டிச.17-இல் சிறை நிரப்பும் போராட்டம்: அன்புமணி

அணுஆயுத அச்சுறுத்தலுக்கு இந்தியா அஞ்சாது: பிரதமா் மோடி

காற்று மாசை தடுக்க 3 வாரங்களில் செயல் திட்டம்: உச்சநீதிமன்றம்

மணப்பாறை அரசுக் கல்லூரியில் கலைத் திருவிழா தொடக்கம்

SCROLL FOR NEXT