ஆய்வு மேற்கொண்ட மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்.  
தற்போதைய செய்திகள்

மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை 25-ஆக உயர்வு: அமைச்சர் மா. சுப்பிரமணியன்

25 மாவட்ட தலைமை மருத்துவமனைகளுக்கு ரூ.1,018 கோடி நிதி ஒதுக்கீடு.

DIN

மக்கள் பயன்பாட்டிற்கு 25 மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகள் மிக விரைவில் வர உள்ளது என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

ரூ.362.87 கோடி மதிப்பீட்டில் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை (JICA) நிதியுதவியுடன் புதிய டவர் பிளாக் கட்டடத்தை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ஆய்வு 

கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை சென்னை மக்களின் குறிப்பாக மத்திய சென்னை, வடசென்னை மக்களின் மிகப் பெரிய அளவிலான மருத்துவ சேவைக்கு ஆதாரமாக இருக்கும் மருத்துவமனை ஆகும். இம்மருத்துவமனை அகில இந்திய அளவில் புகழ்பெற்ற தீக்காய சிகிச்சைகளுக்கும் பெயர் எடுத்த ஒரு மருத்துவமனை ஆகும்.

இம்மருத்துவமனையில் பல்வேறு மருத்துவ வசதிகளை முதல்வர் ஸ்டாலினின் வழிகாட்டுதலின்படி, கடந்த மூன்றரை ஆண்டுகளாக ஏராளமாக செய்யப்பட்டு வருகிறது. அந்தவகையில் ஏற்கெனவே இந்த மருத்துவமனையில் ஒருங்கிணைந்த தீவிர மகப்பேறு மற்றும் பச்சிளங்குழந்தைகள் சிகிச்சைப் பிரிவு (சீமாங்) கட்டடம் இம்மருத்துவமனையில் இயங்கிக் கொண்டிருக்கிறது. சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கு தொடங்கப்பட்ட மெட்ரோ இரயில் திட்டம் பூமிக்கு அடியில் செல்கின்ற பாதை இம்மருத்துவமனையின் வழியே செல்கின்றது. அந்த வகையில் சீமாங் கட்டிடத்தின் கீழே 27 மீட்டர் அளவில் சுரங்கப் பாதை அமைக்கும் பணிகள் நடைபெறவிருக்கிறது.

எனவே மெட்ரோ நிர்வாகம் மருத்துவமனை என்பதால் ஏதேனும் சிறு பாதிப்புகள் ஏற்பட்டு விடக்கூடாது என்பதால் அவர்கள் முன்னெச்சரிக்கையாக மருத்துவமனையை இடமாற்றம் செய்ய வேண்டுகோள் விடுத்தார்கள். அந்தவகையில் உடனடியாக ஒருங்கிணைந்த தீவிர மகப்பேறு மற்றும் பச்சிளங்குழந்தை சிகிச்சைப் பிரிவு ஏறத்தாழ 200 படுக்கை வசதிகளுடன் இயங்கிக் கொண்டிருக்கிறது. அறுவை அரங்கங்கள், சீமாங் பிரிவுகள் புதிய கட்டடத்திற்கு இடமாற்றம் செய்யப்படுகிறது. வரும் காலங்களில் புதிய இடத்தில்தான் இந்த சிகிச்சை பிரிவுகள் இயங்கும்.

இந்தக் கட்டடத்தைப் பொறுத்தவரை ரூ.362.87 கோடி மதிப்பீட்டில் ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை (JICA) நிதியுதவியுடன் கட்டப்பட்டு வருகிறது. ரூ.200.66 கோடி மதிப்பீட்டில் கட்டடங்களும், ரூ.162.21 கோடி மதிப்பீட்டில் மருத்துவ உபகரணங்கள் என்கின்ற வகையில் ரூ.362.87 கோடி செலவில் கட்டடங்கள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. 2,68,815 சதுர அடி பரப்பில் தரைத்தளத்துடன் கூடிய 6 தளங்கள் 468 படுக்கை வசதிகள், 16  அறுவை அரங்குகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள், அதில் ஒன்று Hybrid OT என்று சொல்லக்கூடிய ஒருங்கிணைந்த அறுவை அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். 

JICA நிதி ஆதாரத்துடன் ஏற்கெனவே 7 இடங்களில் குறிப்பாக கீழ்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, மதுரை அரசு இராஜாஜி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ஆகிய 3 மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளிலும், ஆவடி, வேலம்பாளையம், அம்மாபேட்டை, கண்டியப்பேரி ஆகிய 4 இடங்களிலும் மருத்துவமனைகள் கட்டுவதற்கு ரூ.1,634 கோடி செலவில் பணிகள் நடைபெற்று முதல்வர் ஸ்டாலினால் பயன்பாட்டிற்கு வந்திருக்கின்றது.

அந்தவகையில் ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை நிதி ஆதாரத்துடன் கட்டப்பட்ட அனைத்து கட்டடங்களும் பயன்பாட்டிற்கு வந்திருக்கின்றது என்பது மகிழ்ச்சிக்குரிய ஒன்று. இந்தக் கட்டிடத்தினைப் பொறுத்தவரை சிறுநீரகவியல், மயக்கவியல், நரம்பியல், இருதயவியல், இறைப்பை மற்றும் குடல் நோய் துறை போன்ற பல்வேறு துறைகள் படிப்படியாக இடமாற்றம் செய்யப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். 

மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை 25 ஆக உயர்வு 

தமிழ்நாட்டில் இந்த அரசுப் பொறுப்பேதற்கு முன் 19 இடங்களில் மட்டுமே மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகள் இருந்தது. முதல்வர் ஸ்டாலினின் அரசுப் பொறுப்பேற்றபிறகு புதிதாக 25 மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகள் பயன்பாட்டிற்கு மிக விரைவில் வர உள்ளது. கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது.

25 மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளைப் பொறுத்தவரை 19 மாவட்ட அரசு மருத்துவமனைகள் 6 தலைமை மருத்துவமனைகளுக்கு இணையாக மருத்துவ கட்டமைப்புகளை கொண்ட மருத்துவமனைகள். இந்த 25 மாவட்ட தலைமை மருத்துவமனைகளுக்கு ரூ.1,018 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கட்டடங்கள் கட்டும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இன்னும் 3 மாதம் காலங்களில் அனைத்து கட்டுமானப் பணிகளும் முடிவுற்று முதல்வர் ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்டு விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.

எங்கு விபத்துகள் நேர்ந்தாலும் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளில் சிகிச்சைகள் வழங்குவதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். அதுமட்டுமல்லாமல் தாராபுரம் அரசு மருத்துவமனை, ரூ.20 கோடி செலவில் திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு நிகராக வகையில் தாராபுரம் மற்றும் காங்கேயம் அரசு மருத்துவமனைகள் மேம்படுத்தப்பட்டு வருகிறது. 

இன்னுயிர் காப்போம் நம்மைக்காக்கும் 48 திட்டம் 

இன்னுயிர் காப்போம் நம்மைக்காக்கும் 48 என்கின்ற மகத்தான திட்டத்தை 2021 டிசம்பர் திங்கள் 18 ஆம் நாள் முதல்வர் ஸ்டாலினால் தொடங்கப்பட்டது. இதில் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், எந்த நாட்டைச் சேர்ந்தவராக இருந்தாலும் விபத்து நடைபெற்ற முதல் 48 மணி நேரத்திற்கு அரசு சார்பில் சிகிச்சைகள் வழங்கப்படுகிறது.

இதற்கு தமிழ்நாட்டில் 500 இடங்களில் அடிக்கடி விபத்து நடைபெறும் இடங்கள் என கண்டறியப்பட்ட இடங்களில் அதனை ஒட்டி இருக்கின்ற 702 அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் முதல் ரூ.1 லட்சம் வரை அரசு தந்து வந்தது.

இதனை கடந்த மாதத்தில் முதல்வர் ஸ்டாலினின் வழிகாட்டுதலின்படி, ரூ.2 லட்சமாக உயர்த்தி வழங்கப்பட்டது. இந்த திட்டம் தொடங்கப்பட்டதற்கு பிறகு கடந்த மூன்றரை ஆண்டுகளில் இதுவரை  3,20,000த்திற்கும் மேற்பட்டவர்களுக்கு விபத்து சிகிச்சைகளில் இருந்து உயிர்கள் காப்பாற்றப்பட்டு இதற்காக ரூ.283 கோடி நிதி செலவிடப்பட்டுள்ளது. எனவே விபத்துகளில் இருந்து உயிர்கள் காப்பாற்றப்படுவது என்பது இந்தியாவில் மட்டுமல்ல உலகளவில் தமிழ்நாடு முன்னணி மாநிலமாக இருந்துக் கொண்டிருக்கிறது. 

இதையும் படிக்க: ஜாமீனுக்கு நிறைவேற்றக் கூடிய நிபந்தனை விதிக்க வேண்டும்: உயர்நீதிமன்றம்

நோய்த்தொற்று பாதிப்புகள் நடவடிக்கைகள் தொடர்பான கேள்விக்கு 

பருவமழை காலங்களில் நோய்த்தொற்றுகள் பரவுகின்றது என்பது இயற்கை. நோய்ப் பாதிப்புகளிலிருந்து மக்களைப் பாதுக்காக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

அண்டை மாநிலங்களில் ஏதாவது நோய் பாதிப்புகள் இருந்தாலும் தொடர்ந்து கண்காணிக்கப்படும் வகையில் இருந்து வருகிறது. மகாராஷ்டிரத்தில் ஏற்பட்டுள்ள நோய் பாதிப்பு என்பது தமிழ்நாட்டில் வருவதற்குரிய வாய்ப்பில்லை. வந்தாலும் அதனை எதிர்கொள்வதற்குரிய நடவடிக்கைகள் பொது சுகாதாரத்துறை எடுத்து வருகிறது என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்கள்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

3 வெண்கல பதக்கங்களுடன் நிறைவு செய்த மனு பாக்கர்!

மகாராஷ்டிரம் கட்டடம் இடிந்து விபத்து: பலி எண்ணிக்கை 17 ஆக அதிகரிப்பு!

பசியின் கோரம்! காஸாவில் குழந்தைகள் அழுவதற்குக்கூட முடிவதில்லை!

என்ன பார்வை... சைத்ரா!

இந்தியாவுக்கு 50% வரி உக்ரைன் போருக்கானது போல இல்லை: டிரம்பை சாடும் ஜனநாயகக் கட்சி

SCROLL FOR NEXT