கோப்புப் படம் 
தற்போதைய செய்திகள்

மனித மண்டை ஒடை வைத்து விளையாடிய தெருநாய்கள்! விடியோ வைரல்!

மத்தியப் பிரதேசத்தில் தெரு நாய்கள் மனித மண்டை ஓடை வைத்து விளையாடியது குறித்து விசாரணை துவங்கப்பட்டுள்ளது...

DIN

மத்தியப் பிரதேசத்தில் அரசு மருத்துவக் கல்லூரியின் விடுதி அருகே தெரு நாய்கள் மனித மண்டை ஓடை வைத்து விளையாடிய விடியோ வைரலானதைத் தொடர்ந்து காவல் துறையினர் விசாரணையைத் துவங்கியுள்ளனர்.

கடந்த ஜன.29 அன்று இரவு ஜபால்பூரிலுள்ள நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அரசு மருத்துவக் கல்லூரி விடுதியின் பின்னால் மனித மண்டை ஓடு போன்ற வடிவிலுள்ள எழும்பை இரண்டு தெரு நாய்கள் கவ்வி விளையாடும் விடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.

இதுகுறித்து, அந்த மருத்துவக் கல்லூரியின் தலைமை மருத்துவர் நவநீத் சாக்ஸேனா கூறியதாவது இந்த விவகாரம் குறித்து தற்போது எதுவும் கூறமுடியாது என்றும் அது மனிதனுடைய மண்டை ஓடுதானா என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்றும் கூறியுள்ளார். மேலும், இந்த சம்பவம் குறித்து காவல் துறையினருக்கு உடனடியாக தகவல் அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: ஜிபிஎஸ் நோய்க்கு 2-வது பலி: 127 உயர்ந்த பாதிப்பு!

இதனைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட மருத்துவக் கல்லூரிக்கு விரைந்த காவல் துறையினர் அங்கு சோதனை மேற்கொண்டனர். ஆனால், விடியோவில் காணப்பட்ட மண்டை ஓடு அங்கில்லை எனக் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, அந்த விடியோவில் தெரிந்தது மனித மண்டை ஓடா அல்லது அருகிலுள்ள ஏரியிலிருந்து ஏதேனும் அந்த நாய்கள் கவ்வி இழுத்து வந்தனவா என்பது குறித்து தற்போது விசாரணை நடைபெற்று வருகின்றது.

இருப்பினும், ஒருவேளை அது மனித மண்டை ஓடு என்று உறுதி செய்யப்பட்டால், அதனை மருத்துவக் கல்லூரி மாணவர்கள் பயில அவர்களது வீட்டிற்கு எடுத்து செல்லப்பட்ட ஒன்றாக இருக்கக்கூடும் என சந்தேகிக்கப்படுகின்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மிதுன ராசிக்கு மனகுழப்பம் தீரும்: தினப்பலன்கள்!

உற்பத்தித் துறையில் 16 மாதங்கள் காணாத வளா்ச்சி

மாமல்லபுரத்தில் கைவினைப் பொருள்கள் கண்காட்சி

ஆடி வெள்ளி: அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற 80 சதவீத மாணவா்கள் உயா்கல்வியில் சோ்க்கை

SCROLL FOR NEXT