பிரதமர் நரேந்திர மோடி படம்: ஏஎன்ஐ
தற்போதைய செய்திகள்

தில்லிக்கு இரட்டை என்ஜின் அரசு தேவை: பிரதமர் மோடி

தில்லி தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி பேசியது தொடர்பாக....

DIN

தில்லிக்கு இரட்டை என்ஜின் கொண்ட அரசு தேவை என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

தில்லியில் 2013-ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த ஆம் ஆத்மி கட்சி இடையில் ஒா் ஆண்டு குடியரசுத் தலைவா் ஆட்சிக்கு பின்னா் 2015 முதல் ஆம் ஆத்மி கட்சி அரசு தொடா்ச்சியாக இருந்து வருகிறது. ஆம் ஆத்மி கட்சி அரசை அகற்ற பாஜக அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு மத்திய அமைச்சா்கள் நிகழ் தோ்தலில் பல்வேறு வழிகளில் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், தில்லி துவாரகா பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:

”தில்லிக்கு மத்திய, மாநில இரட்டை என்ஜின் கொண்ட அரசு தேவை. பல ஆண்டுகளாக காங்கிரஸ் ஆட்சியில் இருந்ததை நீங்கள் பார்த்தீர்கள். பின்னர், தில்லியை ஆம் ஆத்மி கைப்பற்றியது. மீண்டும் மீண்டும் நாட்டை ஆளும் வாய்ப்பை எனக்கு கொடுத்துள்ளீர்கள்.

இதையும் படிக்க: ஹிமாசலில் 2 கிலோ போதைப் பொருள் பறிமுதல்! 2 பேர் கைது!

தற்போது இரட்டை என்ஜின் கொண்ட அரசை உருவாக்கி, தில்லிக்கு சேவை செய்வதற்காக எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள். பாஜக எந்த அளவிற்கு தில்லியை நவீனமாக்க விரும்புகிறது என்பதை துவாரகாவில் நீங்கள் பார்க்கலாம்.

இங்கு மத்திய அரசு பிரம்மாண்டமாக யஷோபூமியைக் கட்டியது. யஷோபூமியால் துவாரகா மற்றும் தில்லியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். இங்கு மக்களின் வணிகம் பெருகியுள்ளது.

வரும் காலங்களில் இப்பகுதி ஸ்மார்ட் சிட்டியாக மாறும்” என்று பிரதமர் மோடி பேசினார்.

தில்லி சட்டப்பேரவைத் தோ்தல் பிப். 5 -ஆம் தேதி நடைபெற உள்ளது. ஆளும் ஆம் ஆத்மி கட்சி எதிா்க்கட்சிகளிடமிருந்து கடுமையான சவாலை எதிா்கொள்கிறது. தில்லி தோ்தல் முடிவுகள் பிப். 8-ஆம் தேதி வெளியாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஸ்பெயின் சந்தையில் ஹீரோ மோட்டோகார்ப்!

அழகான அதிகாரம்... ஜனனி!

தீபாவளி கூட்ட நெரிசலைத் தவிர்க்க ரயில்வே நடைமேடை டிக்கெட்டுகள் விற்பனை நிறுத்தம் -வடக்கு ரயில்வே

ஸுபீன் கார்க் வழக்கு: கைதிகளை சிறை மாற்றும்போது காவல் துறை வாகனத்திற்கு தீ வைப்பு!

மாஸ்கோவில் புதினுடன் சிரியாவின் இடைக்கால அதிபர் சந்திப்பு!

SCROLL FOR NEXT