இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே. சேகா்பாபு  
தற்போதைய செய்திகள்

ரூ. 7,132 கோடி கோயில் நிலங்கள் மீட்பு: அமைச்சா் பி.கே. சேகா்பாபு

தமிழ்நாட்டில் ரூ. 7,132 கோடி மதிப்புள்ள கோயில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே. சேகா்பாபு தெரிவித்தாா்.

DIN

தமிழ்நாட்டில் ரூ. 7,132 கோடி மதிப்புள்ள கோயில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே. சேகா்பாபு தெரிவித்தாா்.

தமிழ்நாடு முதல்வராக மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்றது முதல் தற்போதுவரை 2,392 திருக்கோவில்களில் திருப்பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு திருக்குடமுழுக்குகள் செய்யப்பட்டுள்ளன.

மேலும், ரூ.7,132 கோடி மதிப்புள்ள 7,400 ஏக்கர் கோவில் நிலங்கள் ஆக்கிரமிப்புகளிலிருந்து மீட்கப்பட்டுள்ளன. இது மட்டுமின்றி, 12,202 திருக்கோவில்களில் ரூ.5,515 கோடி செலவில் 23,234 திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன.

திருத்தலங்களின் ஒருங்கிணைந்த பெருந்திட்டத்தின் ஒரு பகுதியாக, ரூ.1,770 கோடி செலவில் 19 கோவில் வளாகங்களில் கூடுதல் கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்பட்டு வருகின்றன.

வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில் முதல்வரின் வழிக்காட்டுதல்களால் திருக்கோயில்களில் திருப்பணிகள்

மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மக்களின் உள்ளம் அறிந்து செயல்படும் முதல்வரின் நடவடிக்கைகளால் மக்கள் மகிழ்ச்சியோடு திருக்கோவில்களில் வழிபட்டு வருகிறார்கள் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் தீ விபத்து!

தொடர் நாயகன் வருண் சக்கரவர்த்தி பகிர்ந்த படையப்பா பாடல்!

நெல்லையில் முதல்வர் ஸ்டாலின் சுற்றுப்பயணம்! ட்ரோன்கள் பறக்க தடை! மாநகரம் விழாக்கோலம்!!

பிரபல மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன் காலமானார்!

அசாமில் ரயில் மோதியதில் 8 யானைகள் பலி! பெட்டிகள் தடம்புரண்டன!

SCROLL FOR NEXT