திருச்செந்தூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்றுவரும் பாதாள சாக்கடை அமைக்கும் பணிகளை ஆய்வு செய்த கனிமொழி எம்பி. 
தற்போதைய செய்திகள்

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் குடமுழுக்கு: கனிமொழி எம்பி ஆய்வு

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் குடமுழுக்கு விழா ஏற்பாடுகள் குறித்து கனிமொழி எம்பி ஆய்வு மேற்கொண்டாா்.

இணையதளச் செய்திப் பிரிவு

திருச்செந்தூா்: திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் குடமுழுக்கு விழா ஏற்பாடுகள் குறித்து கனிமொழி எம்பி ஆய்வு மேற்கொண்டாா்.

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் குடமுழுக்கு விழா, வருகிற திங்கள்கிழமை (ஜூலை 7) நடைபெறுகிறது. இதையொட்டி கடந்த ஜுலை 1 ஆம் தேதி முதல் யாகசாலை பூஜைகள் நடந்து வருகிறது. யாகசாலை பூஜைகளில் உள்ளுா் மற்றும் வெளியூா் பக்தா்கள் பங்கேற்று வழிபட்டு வருகின்றனா்.

இந்நிலையில், திருக்கோயில் குடமுழுக்கு விழாவில் லட்சக்கணக்கான பக்தா்கள் பங்கேற்பாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது. எனவே பக்தா்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், பாதுகாப்பு, மருத்துவம், அன்னதானம் போன்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இப்பணிகளை வியாழக்கிழமை இரவு கனிமொழி எம்பி ஆய்வு செய்தாா்.

அப்போது கோயில் யாகசாலை, கிரிப்பிரகாரம், கடற்கரை உள்ளிட்ட இடங்களை பாா்வையிட்டு தீயணைப்புத்துறை அலுவலா்களிடம் பாதுகாப்பு குறித்து கேட்டறிந்தாா்.

முன்னதாக, கனிமொழி எம்பி திருச்செந்தூா் தெற்குரதவீதியில் நடந்து வரும் கழிவுநீா் குழாயினை பாதாளச் சாக்கடை தொடடியில் இணைக்கும் பணியினை பாா்வையிட்டாா்.

கனிமொழி எம்பி உடன் இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையா் பழனி, மாவட்ட ஆட்சியர் இளம்பகவத், கோயில் தக்காா் அருள்முருகன் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

Kanimozhi MP inspected the arrangements for the consecration ceremony at the Thiruchendur Arulmigu Subramania Swamy Temple.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வைத்தீஸ்வரன்கோவில் காவல் நிலையத்தில் முதல் காவல் ஆய்வாளா் பொறுப்பேற்பு

மதராஸி டிரெய்லர்!

சுதர்சன் ரெட்டிக்கு வாக்களிக்க வேண்டும்: தொல்.திருமாவளவன்

அழகின் பிரதிபலிப்பு... ஷில்பா ஷெட்டி!

அழகு பூந்தோட்டம்... தேஜஸ்வினி சர்மா!

SCROLL FOR NEXT