கோவை: கோவையில் நடுரோட்டில் திடீரென தீப்பற்றி எரிந்த காரியில் இருந்த உரிமையாளர் நல்வாய்ப்பாக உயிா் தப்பினாா். பெட்ரோலில் இருந்து எரிவாயுக்கு மாற்றிய போது தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.
கோவையில் இருந்து ஊட்டிக்கு செல்லும் முக்கிய சாலையாக மேட்டுப்பாளையம் சாலை உள்ளது. இந்த சாலையில் கடந்த சில மாதங்களாக மேம்பாலப் பணிகள் நடைபெற்று வருவதால், எப்போதும் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படுகிறது.
இந்நிலையில், நல்லம்பாளையம் ராமசாமி நகரைச் சேர்ந்த ஓய்வு பெற்ற தமிழக அரசு போக்குவரத்துக் கழக நடத்துநர் ஜோதிராஜ், சாய்பாபா காலினியில் இருந்து மேட்டுப்பாளையம் சாலை வழியாக நல்லாம்பாளையத்தில் உள்ள வீட்டிற்கு சனிக்கிழமை காலை காரில் வந்து கொண்டிருந்தார். அப்போது காரில் இருந்து பெட்ரோல் கசிந்து உள்ளது. இதுகுறித்து சாலையில் சென்ற பிற வாகன ஓட்டிகள் அவரிடம் கூறியுள்ளனர்.
இது குறித்து கவுண்டம்பாளையம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர். அதற்குள் கார் முழுமையாக எரிந்து நாசமானது.
பெட்ரோல் மற்றும் எரிவாயு இணைப்பு உள்ள கார் நடுரோட்டில் திடீரென தீப்பற்றி எரிந்ததால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.