அழகுமுத்துக் கோன் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்திய முதல்வர் மு.க.ஸ்டாலின். 
தற்போதைய செய்திகள்

அழகுமுத்துக் கோன் சிலைக்கு முதல்வர் ஸ்டாலின் மரியாதை!

இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் அழகுமுத்துக் கோனின் 315-ஆவது பிறந்த நாளையொட்டி, அவரது சிலைக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை மரியாதை செலுத்தினார்.

இணையதளச் செய்திப் பிரிவு

இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் அழகுமுத்துக் கோனின் 315-ஆவது பிறந்த நாளையொட்டி, அவரது சிலைக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை மரியாதை செலுத்தினார்.

இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் மாவீரன் அழகுமுத்துக்கோன் பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை எழும்பூர் ரயில் நிலையம் அருகில் உள்ள அழகுமுத்துக்கோன் திருவுருவச்சிலைக்கு தமிழக அரசு தரப்பில் மரியாதை செலுத்தும் நிகழ்வு வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது.

இந்த நிகழ்வில், அழகுமுத்துக்கோன் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்தும், திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

முதல்வருடன் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், சென்னை மேயர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.

Tamil Nadu CM M.K. Stalin paid tribute to the statue of Indian freedom fighter Azhugu Muthukkon on Friday, on the occasion of her 315th birth anniversary.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

5 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி: தொடரை வென்றது தெ.ஆ.!

கண்ணீருடன் தொடங்கிய மெஸ்ஸி 2 கோல்கள்: ஆர்ஜென்டீனா அபார வெற்றி!

ஆசிரியர் நாள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து

பிரிந்தவர்களை 10 நாள்களில் இணைக்க வேண்டும்: செங்கோட்டையன் காலக்கெடு!

புதிய உச்சத்தை பதிவு செய்தது தங்கம் விலை: இன்றைய நிலவரம்!

SCROLL FOR NEXT