தங்கம் விலை இன்று உயர்ந்தது! எவ்வளவு?
தங்கம் விலை நிலவரம் பற்றி...
தங்கத்தின் விலை சவரனுக்கு இன்று ரூ. 120 உயர்ந்துள்ளது.
தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது. ஒரு சில நாள்கள் தங்கத்தின் விலை குறைந்தாலும் கடந்த சில வாரங்களை ஒப்பிடுகையில் தங்கத்தின் விலை வேகமாக உயர்ந்து வருகிறது.
நேற்று(திங்கள்கிழமை) காலை, மாலை என இரு முறை தங்கம் விலை உயர்ந்தது. மொத்தமாக ரூ. 1,120 உயர்ந்து ஒரு சவரன் ரூ.72,480-க்கும் ஒரு கிராம் ரூ. 9,060-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இன்று(செவ்வாய்க்கிழமை) மேலும் சவரனுக்கு ரூ. 120 உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ. 72,640 -க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ. 20 உயர்ந்து ரூ.9,080-க்கு விற்பனையாகிறது.
அதேசமயம் வெள்ளி விலை ஒரு கிராம் ரூ. 2 உயர்ந்து ரூ.113-க்கும், ஒரு கிலோ ரூ.1,13,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.