தங்கம் விலை அதிரடி உயர்வு! ரூ. 400-ஐ தொட்ட வெள்ளி!
இன்றைய தங்கம், வெள்ளி விலை விலை நிலவரம் தொடர்பாக...
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(ஜன. 28) அதிரடியாக சவரனுக்கு ரூ. 2,960 உயர்ந்துள்ளது.
சர்வதேச அளவில் தங்கத்தின் மீதான முதலீடு உயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தங்கம் விலை சவரன் ரூ.1 லட்சத்தைக் கடந்து தொடர்ந்து உயா்ந்து வருகிறது.
அந்த வகையில், திங்கள்கிழமை தங்கம் சவரன் ரூ.1,20,200-க்கு விற்பனையான நிலையில், செவ்வாய்க்கிழமை காலை தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.65 குறைந்து ரூ.14,960-க்கும், சவரனுக்கு ரூ. 520 குறைந்து ரூ. 1,19,680-க்கும் விற்பனையானது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(ஜன. 28) கிராமுக்கு ரூ. 370 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 15,330-க்கும் சவரனுக்கு ரூ. 2,960 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 1,22,680-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல, வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.13 உயர்ந்து ரூ.400-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.13,000 உயா்ந்து ரூ. 4,00,000-க்கும் விற்பனையாகிறது.
In Chennai, the price of gold jewelry has increased dramatically today (Jan. 28) by Rs. 2,960 per sovereign.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.