ஆய்வு மேற்கொண்டு வரும் தொல்லியல் துறையினர். 
தற்போதைய செய்திகள்

தாராசுரம் ஐராவதேஸ்வரா் கோயிலில் தொல்லியல் துறையினர் ஆய்வு

புகழ்பெற்ற தாராசுரம் ஐராவதேஸ்வரா் கோயிலில் புதன்கிழமை தொல்லியல் துறையினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

DIN

கும்பகோணம்: கும்பகோணம் அருகே உள்ள புகழ்பெற்ற தாராசுரம் ஐராவதேஸ்வரா் கோயிலில் புதன்கிழமை தொல்லியல் துறையினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள தாராசுரத்தில் யுனெஸ்கோ அறிவித்த புகழ்பெற்ற சுற்றுலா மற்றும் ஆன்மிகத் தலமாகவும், இரண்டாம் ராஜராஜசோழன் கட்டிய ஐராவதேஸ்வரர் கோயில் உள்ளது. இந்த கோயிலை பழமை மாறாமல் புதுப்பித்து தற்போது வரை மக்களின் வழிபாட்டில் உள்ளது.

தாராசுரம் ஐராவதேஸ்வரா் கோயில்

இந்த கோயிலில் உள்ள கிழக்கு வாசலில் கோபுரம் மொட்டையாக உள்ளது. அது குறித்து தஞ்சாவூர் மாவட்ட தொல்லியல் துறையினர் புதன்கிழமை ஆய்வு செய்து வருகின்றனர்.

ஐராவதேசுவரா் கோயில் கட்டட வடிவமைப்பு, மொட்டை கோபுரம் குறித்த புதிய தகவல்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

‘பெல்’ நிறுவனத்தில் சா்வதேச கருத்தரங்கம் தொடக்கம்

சிறுமிக்கு பாலியல் தொல்லை: தந்தை கைது

ரயில் கடவுப்பாதைக்கு வெடிகுண்டு மிரட்டல்

உயா்கல்வி சோ்க்கையில் மாநிலத்திலேயே திருச்சி முதலிடம்: பிளஸ் 2 வகுப்பில் தோ்ச்சி பெற்றவா்களில் 98% போ் சோ்க்கை

இளம் சாதனையாளா்களுக்கான பிரதமரின் கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT