முகப்பு
தற்போதைய செய்திகள்

திருத்தணி அருகே காங்கிரஸ் பிரமுகர் கொலை

திருத்தணி அருகே காங்கிரஸ் பிரமுகரும் நெசவுத் தொழிலாளியுமான ராஜேந்திரன் மர்மநபர்களால் அடித்துக் கொலை செய்யப்பட்டார்.

Updated On : 11 ஜூன், 2025 at 7:08 AM
காங்கிரஸ் பிரமுகர் ராஜேந்திரன்
பகிர்:

திருத்தணி: திருத்தணி அருகே காங்கிரஸ் பிரமுகரும் நெசவுத் தொழிலாளியுமான ராஜேந்திரன் மர்மநபர்களால் அடித்துக் கொலை செய்யப்பட்டார்.

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அம்மையார்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். நெசவுத் தொழிலாளியான இவர், அம்மையார்குப்பம் பகுதி நகரத் துணைத் தலைவராக இருந்து வருகிறார்.

இந்நிலையில், ராஜேந்திரன் அவரது வீட்டின் பின்புறத்தில் தலையில் பலத்த காயங்களுடன் இறந்து கிடந்தார்.

இவரை வீட்டின் அருகே கஞ்சா புகைப்பவர்களை தட்டிக் கேட்டதால் அடித்துக் கொலை செய்திருக்கலாம் என கூறப்படுகிறது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், ராஜேந்திரன் உடலை மீட்டு உடல்கூறாய்வுக்காக திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், இரும்புக் கம்பிகளைத் திருட வந்தவர்கள் அடித்துக் கொன்றார்களா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.