சென்னை மெரீனா கடற்கரையில் கட்டணமில்லா குடிநீா் வழங்கும் தானியங்கி(ஏடிஎம்) இயந்திரத்தின் செயல்பாட்டை தொடங்கி வைத்த முதல்வா் மு.க.ஸ்டாலின். 
தற்போதைய செய்திகள்

மாநகரில் கட்டணமில்லா குடிநீா் ஏடிஎம் இயந்திரங்கள்: முதல்வா் தொடங்கி வைத்தார்!

சென்னையில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் 50 கட்டணமில்லா குடிநீா் வழங்கும் தானியங்கி(ஏடிஎம்) இயந்திரங்களின் செயல்பாட்டை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

DIN

சென்னையில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் 50 கட்டணமில்லா குடிநீா் வழங்கும் தானியங்கி(ஏடிஎம்) இயந்திரங்களின் செயல்பாட்டை முதல்வா் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை தொடங்கி வைத்தார்.

சென்னை மாநகரில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் சென்னை குடிநீா் வாரியம் சாா்பில் ரூ.6.04 கோடியில் நிறுவப்பட்டுள்ள 50 கட்டணமில்லா குடிநீா் வழங்கும் தானியங்கி இயந்திரங்கள் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக கொண்டுவரப்பட்டுள்ளன.

இந்த நிலையில், இந்தக் குடிநீா் ஏடிஎம் இயந்திரங்களின் இயக்கத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை தொடங்கி வைத்தார்.

சென்னை மெரீனா கடற்கரையில் புதன்கிழமை காலை 10 மணியளவில் நடைபெற்ற தொடக்க நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முதல்வா் மு.க.ஸ்டாலின், அங்கு வைக்கப்பட்டுள்ள தானியங்கி குடிநீா் வழங்கும் இயந்திரத்தின் செயல்பாட்டை மக்களின் பயன்பாட்டிற்காக தொடங்கி வைத்ததுடன், அங்கிருந்தபடியே மாநகரின் பிற பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள இயந்திரங்களின் செயல்பாட்டையும் காணொலி மூலம் தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் கே.என். நேரு, சேகர்பாபு, மேயர் ப்ரியா, அரசு அதிகாரிகள் மற்றும் குடிநீா் வடிகால் வாரிய அதிகாரிகள் உள்பட பலா் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உச்ச்... பூனம் பாண்டே!

Thiruvarur Vijay Full Speech | Thiruvarur Campaign | M.K.Stalin | TVK | DMK

வெளியானது தனுஷின் இட்லி கடை பட டிரைலர்!

மண்டோதரி கதாபாத்திரத்தில் பூனம் பாண்டே: பாஜகவிலிருந்து வலுக்கும் எதிர்ப்பு!

போக்குவரத்து கழகத்தில் தொழிற்பழகுநா் பயிற்சி: பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்!

SCROLL FOR NEXT