தற்போதைய செய்திகள்

வி.பி.சிங் புகழை நாளும் போற்றுவோம்!: முதல்வர் ஸ்டாலின்

முன்னாள் பிரதமா் வி.பி.சிங் பிறந்த நாளையொட்டி, வி.பி.சிங் புகழை நாளும் போற்றுவோம் என முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

DIN

சென்னை: முன்னாள் பிரதமா் வி.பி.சிங் பிறந்த நாளையொட்டி, வி.பி.சிங் புகழை நாளும் போற்றுவோம் என முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

உத்தர பிரதேசத்தில் பிறந்திருந்தாலும் ஒட்டுமொத்த இந்தியாவுக்குமான தலைவா்- சமூகநீதிக் காவலா் என்று அழைக்கப்படும் மறைந்த முன்னாள் பிரதமர் வி.பி.சிங் பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி, வி.பி.சிங் புகழை நாளும் போற்றுவோம் என முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சமூக வலைதளத்தில் வி.பி.சிங் நினைவைப் போற்றி, முதல்வா் வெளியிட்ட பதிவு:

இந்திய நிலப்பரப்பில் மண்டிக்கிடந்த ஆதிக்க இருள் அகற்றிட, சமூகநீதி எனும் பேரொளியைத் தூக்கிச் சுமந்த விடிவெள்ளி ‘சமூகநீதிக் காவலர்’ வி.பி.சிங் அவர்களின் புகழை நாளும் போற்றுவோம்!

ஆதிக்கத்துக்கு எதிரான போராட்ட வரலாற்றைத் திரிபுகளால் மாற்றுவது மீண்டும் அடிமைத்தனத்துக்கே வழியமைக்கும் முயற்சி என்பதை இளம் தலைமுறைக்கு எடுத்துச் சொல்வோம்! என கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாகிஸ்தான்: ரசாயன தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து 15 பேர் பலி

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 மாதங்களில் இல்லாத அளவுக்கு கடும் சரிவு!

பிகார் தேர்தல்: 24,000 தபால் வாக்குகள் நிராகரிப்பு

லவ் தீம்... நிஹாரிகா ரய்ஸாதா!

துபை விமான காட்சியில் எரிந்து விழுந்த இந்திய தேஜஸ் விமானம்!

SCROLL FOR NEXT