உயிரிழந்த மீன்வர் ராமலிங்கம் 
தற்போதைய செய்திகள்

நடுக்கடலில் மீனுடன் சேர்ந்த மடிவலை மார்பில் விழுந்ததில் மீனவர் பலி

நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, மீனுடன் சேர்ந்த மடிவலை மார்பில் விழுந்ததில் நாகை மீனவர் பலியானார்.

DIN

நாகை: நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, மீனுடன் சேர்ந்த மடிவலை மார்பில் விழுந்ததில் நாகை மீனவர் பலியானார்.

நாகை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து ஆனந்த் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில், கீச்சாங்குப்பத்தை சேர்ந்த ராமலிங்கம், திருஞானம், சங்கர், விக்னேஷ் உள்ளிட்ட 7 மீனவர்கள் கடந்த 22 ஆம் தேதி கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்றனர்.

இவர்கள் நாகையிலிருந்து கிழக்கே 10 நாட்டிகல் மைல் தொலைவில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். பின்னர் வலையில் பிடிபட்ட மீன்களை, மீனவர்கள் படகில் ஏற்றும் பணியை மேற்கொண்டனர். அப்போது பாரம் தாங்காத இரும்பு கப்பி திடீரென அறுந்த வலையை இழுத்து பிடித்திருந்த மீனவர் ராமலிங்கம் மீது மீனுடன் சேர்ந்த மடிவலை மார்பில் விழுந்தது.

இதில் மீனவர் ராமலிங்கம் விசைப்படகிலேயே சுருண்டு விழுந்து சக மீனவர்கள் கண்ணெதிரே பரிதாபமாக உயிரிழந்தார்.

சக மீனவர்கள் உயிரிழந்த மீனவர் ராமலிங்கத்தின் உடலை நாகை மீன் பிடித்து துறைமுகத்திற்கு கொண்டு வந்தனர். அவரது உடலைக் கண்ட அவரது உறவினர்கள் கதறி அழுதனர். மீனவரின் உடலை போலீஸார் மீட்டு நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடல்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இன்று உங்க ராசிக்கு எப்படி?

மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இளைஞருக்கு 9 ஆண்டுகள் சிறை

தெய்வ தரிசனம்... வழக்கு விவகாரங்களில் வெற்றி தரும் திருநாவலூர் திருநாவலேஸ்வரர்!

கைதிகளுக்கு சிறப்பு எழுத்தறிவு திட்டம்: வேலூா் சிறைகளில் வகுப்புகள் தொடக்கம்

வேலூா் நறுவீ மருத்துவமனையில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கு நவீன சிறப்பு பிரிவு தொடக்கம்

SCROLL FOR NEXT