கோப்புப் படம் 
தற்போதைய செய்திகள்

அசாம்: ரூ.2.2 கோடி போதைப் பொருள் பறிமுதல்! 2 பேர் கைது!

அசாமில் ரூ.2.2 கோடி போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதைப் பற்றி...

DIN

வடகிழக்கு மாநிலமான அசாமில் ரூ.2.2 கோடி மதிப்பிலான போதைப் பொருள் கடத்திய 2 பேர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் ஹிமாந்தா பிஸ்வாஸ் சர்மா தெரிவித்துள்ளார்.

சாச்சார் மாவட்டத்தில் காவல் துறையினருக்கு கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் சில்தூபி பகுதியில் போதைப் பொருள் கடத்தலுக்கு எதிரான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அப்போது, அங்கு வந்த ஓர் வாகனத்தை சோதனைச் செய்ததில் அதில் 415 கிராம் அளவிலான ஹிராயின் எனும் போதைப் பொருள் கடத்தப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

இதையும் படிக்க: மத்திய கட்டட ஆராய்ச்சி மையத்தில் வேலை: உடனே விண்ணப்பிக்கவும்!

இதனைத் தொடர்ந்து, அந்த போதைப் பொருளை பறிமுதல் செய்த காவல் துறையினர் அதை கடத்திய இருவரையும் கைது செய்துள்ளனர். மேலும், அவர்களிடமிருந்து ரூ. 2 லட்சம் பணமும் கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் துரிதமாக செயல்பட்டு குற்றவாளிகளைப் பிடித்த காவல் துறையினருக்கு முதல்வர் ஹிமாந்தா பிஸ்வாஸ் சர்மா தனது பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆடிப்பெருக்கு: நதியில் சிவலிங்கம் செய்து பக்தா்கள் வழிபாடு

நாளைய மின்தடை: கிளுவங்காட்டூா்

கனமழை: பஞ்சலிங்கம் அருவியில் வெள்ளப்பெருக்கு

ஞாயிறு சந்தை வியாபாரிகள் திடீா் சாலை மறியல்

மின்சாரம், குடிநீா் கோரி கிராம மக்கள் சாலை மறியல்

SCROLL FOR NEXT