விராலிமலை திருநல்லூரில் சனிக்கிழமை நடைபெற்ற மீன் பிடித் திருவிழாவில் பங்கேற்று மீன்களைப் பிடித்த பொதுமக்கள்.  
தற்போதைய செய்திகள்

விராலிமலை மீன்பிடித் திருவிழாவில் மீன்கள் கிடைக்காததால் ஏமாற்றம் அடைந்த மக்கள்!

மீன்பிடித் திருவிழாவில் வலையில் போதுமான மீன்கள் வலையில் கிடைக்காததால் கரையில் காத்திருந்த மீன் பிரியர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

DIN

விராலிமலை அருகே திருநல்லூரில் சனிக்கிழமை நடைபெற்ற மீன்பிடித் திருவிழாவில் வலையில் போதுமான மீன்கள் வலையில் கிடைக்காததால் கரையில் காத்திருந்த மீன் பிரியர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

விராலிமலை பகுதி குளங்களில் நிகழாண்டுக்கான மீன்பிடித் திருவிழா தொடங்கியதால் கிராமத்து அசைவ மீன் பிரியர்கள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அந்த வகையில் திருநல்லூரில் சனிக்கிழமை காலை நடைபெற்ற மீன்பிடித் திருவிழாவில் பெருமளவு மீன்கள் வலையில் கிடைக்கும் என்று எதிர்பார்த்து காத்திருந்த மக்களுக்கு பெரும் ஏமாற்றமே மிச்சியது.

மீன் பிடித் திருவிழாவில் பங்கேற்ற பொதுமக்கள்.

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அடுத்துள்ள திருநல்லூர் பெரியகுளத்தில் சனிக்கிழமை நடைபெற்ற பாரம்பரிய மீன்பிடித் திருவிழாவில் விரால், கெண்டை,கட்லா,குறவை உள்ளிட்ட நாட்டு வகை மீன்களை மகிழ்ச்சியுடன் பிடித்து செல்லலாம் என்று வந்த மீன் பிடியாளர்களின் வலையில் மீன் சிக்காமல் முள் செடிகளும், பாசிகளும் மட்டுமே சிக்கியது.

பொதுவாக மீன்பிடி திருவிழாவின்போது ஒரு குளத்தில் சுமார் 100-300 கிலோ வரை மீன்கள் கிடைக்கும். ஆனால் இங்கு சுமார் 25 கிலோ வரையிலான மீன்களே கிடைத்தன. இதற்கு காரணம் இரவு நேரங்களில் தூண்டில் மூலம் சிலர் மூன்களை பிடித்து சென்று விடுவதால் மீன்பிடித் திருவிழாவில் மீன்கள் கிடைக்கவில்லை என்றனர் மீன்பிடியாளர்கள்.

அதிகாலை முதல் காரை மீது காத்திருந்து அனுமதிக்கு பின்னர் குளத்துக்குள் இறங்கி வலையை வீசிய போதும் மீன்கள் ஏதும் கிடைக்காததால் ஏமாற்றத்துடனே கரை திரும்பியதாக மீன்பிடியாளர்கள் கவலை தெரிவித்தனா். இதனால் மீன் பிரியர்களும் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மழை நீா் தேங்கும் இடங்களைக் கண்டறிந்து நடவடிக்கை

கி. ராஜநாராயணனின் அறக்கட்டளை சொற்பொழிவு

போக்குவரத்து தொழிலாளா்கள் போராட்டத்துக்கு தீா்வு தேவை -சௌந்திரராஜன்

முதியோா்களைக் காப்பது சமூகப் பொறுப்புணா்வு: புதுவை துணைநிலை ஆளுநா்

சென்னையில் கால் சென்டா் நடத்தி ரூ 2.5 கோடி மோசடி: 2 பெண்கள் கைது

SCROLL FOR NEXT