உலக மகளிர் நாள் விழா’ நிகழ்ச்சியில் ‘இளஞ்சிவப்பு’ ஆட்டோ திட்டத்தை கொடியசைத்து தொடங்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் . 
தற்போதைய செய்திகள்

‘இளஞ்சிவப்பு’ ஆட்டோ திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்று வரும் ‘உலக மகளிர் நாள் விழா’ நிகழ்ச்சியில் ‘இளஞ்சிவப்பு’ ஆட்டோ திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

DIN

சர்வதேச மகளிர் நாளையொட்டி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்று வரும் ‘உலக மகளிர் நாள் விழா’ நிகழ்ச்சியில் ‘இளஞ்சிவப்பு’ ஆட்டோ திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8 ஆம் தேதி சர்வதேச மகளிர் நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி தமிழக அரசின் சார்பில் பெண்களுக்கான பல்வேறு நலத்திட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கில் சனிக்கிழமை காலை (மார்ச்.8) நடைபெற்று வரும் உலக மகளிர் தின விழா - 2025-ல் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் 100 மகளிருக்கு இளஞ்சிவப்பு ஆட்டோக்கள், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை சார்பில் சுய உதவிக் குழு மகளிருக்கு 50 நீல நிற மின் ஆட்டோக்கள், தொழிலாளர் நலத் துறை சார்பில் மகளிருக்கு 100 மஞ்சல் நிற ஆட்டோக்கள், உட்பட மகளிருக்கு 250 ஆட்டோக்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்த திட்டத்தின் கீழ் முதல்கட்டமாக 250 பெண் ஓட்டுநர்கள் தேர்வு செய்யப்பட்டு, ரூ.1 லட்சம் வரை அரசு மானியம் வழங்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எதிலும் வெற்றி இவர்களுக்கு: தினப்பலன்கள்!

பூந்தமல்லி - சுங்குவாா்சத்திரம் அரசுப் பேருந்து மப்பேடு வரை நீட்டிப்பு

முதல்வரின் தாயுமானவா் திட்டம்: திருவள்ளூா் மாவட்டத்தில் இன்று தொடக்கம்

கூட்டுறவு சங்க உதவியாளா் பணித் தோ்வு: நுழைவுச் சீட்டு வெளியீடு!

சென்னை மாநகராட்சி அரையாண்டு வரி வருவாய் ரூ.1,002 கோடி!

SCROLL FOR NEXT