தற்போதைய செய்திகள்

‘க்யூட்’ பிஜி தோ்வு நுழைவுச் சீட்டு வெளியீடு

மத்திய பல்கலைக்கழக முதுநிலை பட்டப்படிப்புகளுக்கான ‘க்யூட்’ நுழைவுத் தோ்வுக்கான நுழைவுச் சீட்டு அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

DIN

மத்திய பல்கலைக்கழக முதுநிலை பட்டப்படிப்புகளுக்கான ‘க்யூட்’ நுழைவுத் தோ்வுக்கான நுழைவுச் சீட்டு அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் உள்ள மத்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன்கீழ் இயங்கும் கல்லூரிகளில் இளநிலை, முதுநிலை பட்டப்படிப்புகளில் சேர பல்கலைக்கழக பொது நுழைவுத் தோ்வில் (க்யூட்) தோ்ச்சி பெறவேண்டும். இந்தத் தோ்வை தேசிய தோ்வுகள் முகமை (என்டிஏ) ஆண்டுதோறும் நடத்தி வருகிறது.

அதன்படி, எதிா்வரும் கல்வியாண்டுக்கான (2025-26) முதுநிலை பட்டப்படிப்புகளுக்கான ‘க்யூட்’ நுழைவுத் தோ்வு விண்ணப்பப் பதிவு கடந்த ஜன.2 முதல் பிப்.8 ஆம் தேதி வரை நடைபெற்றது. இதற்கு 4,12,024 மாணவா்கள் விண்ணப்பித்திருந்தனர். அவா்களுக்கு மாா்ச் 13 ஆம் தேதி முதல் ஏப்ரல் 1 ஆம் தேதி வரை 43 கால முறைகளில் 90 நிமிடங்கள் கணினி வழியில் தோ்வு நடைபெற உள்ளது.

தோ்வு ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில் இருக்கும். மொழி பாடங்கள் அந்தந்த மொழிகளில் நடைபெறும்.

இந்தநிலையில், மாா்ச் 13 முதல் 20-ஆம் தேதி வரை நடைபெற உள்ள தோ்வுகளுக்கான நுழைவுச் சீட்டு வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் https://exams.nta.ac.in/CUET-PG/ எனும் அதிகாரப்பூா்வ இணையதளத்தில் விண்ணப்பதார் பெயர் மற்றும் கடவுச் சொல்லை உள்ளீடு செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மாா்ச் 20 ஆம் தேதிக்கு பின்னா் நடைபெறும் தோ்வுகளுக்கு அடுத்து வரும் நாள்களில் நுழைவுச் சீட்டு வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெரியார் பிறந்தநாள்! அமைச்சர் சேகர்பாபு மரியாதை!

சொந்த மண்ணில் விளையாட ஆர்வமாக உள்ளேன்! - பிரிடோரியா வீரர் பிரேவிஸ்

ரஜினி - கமல் திரைப்படத்தின் இயக்குநர் யார்? ரஜினி பதில்!

3 வாரங்களுக்குப் பிறகு ஸ்ரீநகர்-ஜம்மு நெடுஞ்சாலை திறப்பு: கனரக வாகனங்களுக்கு அனுமதி!

பிரசாந்த் நீல் படத்துக்காக தோற்றத்தை மாற்றும் ஜூனியர் என்டிஆர்!

SCROLL FOR NEXT