தற்போதைய செய்திகள்

சென்னையில் குடும்பத்துடன் டாக்டர் தற்கொலை! 4 பேர் இறக்க காரணம் என்ன?

சென்னை திருமங்கலத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

DIN

சென்னை: சென்னை திருமங்கலத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை திருமங்கலத்தை சேர்ந்தவர் மருத்துவர் பாலமுருகன். உயர்நீதிமன்ற வழக்குரைஞரான இவரது மனைவி சுமதி, மகன்கள் ஜெஷ்வந்த்குமார்(19), லிங்கேஸ்வரன்(17) ஆகிய நான்கு பேரும் தற்கொலை செய்து கொண்டனர்.

இது குறித்து அருகில் இருந்தோர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலை சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருமங்கலம் போலீசார், சடல்களை மீட்டு உடல்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தற்கொலை தொடர்பாக வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ரூ.5 கோடி கடன் தொல்லையால் மருத்துவர் பாலமுருகன் மன உளைச்சலில் இருந்து வந்த நிலையில், குடும்பத்தோடு தற்கொலை செய்துகொண்டதாக முதல்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.

திருமங்கலத்தில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 4 போ் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பத்துக்கும் மேற்பட்ட யானைகள் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து மளிகை கடை வீடுகளை இடித்து அட்டகாசம்

ஆணவக்கொலைக்கு எதிராக தனிச் சட்டம் வருமா? முதல்வர்தான் சொல்லணும் என துரைமுருகன் பதில்

நடிகர் மதன் பாப் காலமானார்

பத்த வச்சுட்டியே பரட்டை... கூலி டிரைலர் இறுதியில் காக்கா சப்தம்!

மனைவி தனது காதலனுடன் பழகி வந்ததாக சந்தேகப்பட்ட கணவன் இரு குழந்தைகளுடன் தற்கொலை!

SCROLL FOR NEXT